தமிழ்நாட்டில்
538 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
இவற்றில் உள்ள 1 லட்சத்து 80 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அண்ணா
பல்கலைக்கழகம் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றை சாளர முறையில் நிரப்புகிறது.
சென்னையில் 4
இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 60 மையங்களில் என்ஜினீயரிங் விண்ணப்பங்கள்
வினியோகம் செய்யப்படுகிறது. நேரிலும், தபால் வழியாகவும், ஆன்லைன்
மூலமாகவும் பி.இ., பி.டெக் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப
படிவத்தை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராம் மாணவ– மாணவிகளுக்கு இன்று
வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
பொறியியல்
படிப்பில் சேருவதற்கு இன்று முதல் 27–ந்தேதி வரை விண்ணப்பம் வினியோகம்
செய்யப்படும். சென்னை மையத்தில் மட்டும் 29–ந்தேதி வரை கிடைக்கும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 29–ந்தேதி மாலை 6 மணிக்குள்
சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்த ஆண்டு விளையாட்டு வீரர்களுக்கு ஜூன் 29–ந்தேதியும், மாற்றுத்திறனாளிகளுக்கு 30–ந்தேதியும் கலந்தாய்வு நடைபெறும்.
பொது கலந்தாய்வு
ஜூலை 1–ந்தேதி தொடங்குகிறது. தரவரிசை பட்டியல் ஜூன் 19–ந்தேதி
வெளியிடப்படும். கலந்தாய்வில் பங்கேற்க சென்னை வரும் மாணவ–மாணவிகளுக்கு
வழக்கம் போல குடிநீர், கழிப்பிட மற்றும் குளிப்பதற்கான வசதி செய்து
தரப்படும்.
அண்ணா
பல்கலைக்கழகத்தில் விண்ணப்பங்கள் வழங்க 10 கவுண்டர் திறக்கப்பட்டுள்ளன.
மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு பிரிவினருக்கு தனி கவுண்டர்
திறக்கப்பட்டுள்ளது. மேலும் உடற்தகுதி சான்று வழங்கவும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், பெற்றோர்கள் கலந்தாய்வை பார்க்க வசதி
செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...