சமூகத்தில் பின்தங்கியவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு உருவாக்கப்பட்டதே நலத்துறைப்பள்ளிகள் ஆகும்..அதிலும் கள்ளர் நலத்துறை பள்ளிகளில் கடந்த 7 வருடங்களாக காலிப்பணியிடம் நிரப்பப்படாமல இருப்பதால் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் நிலை மிக மோசமானதாகவே உள்ளன என்பதை இரு தினங்களுக்கு முன்னதாக தினசரி நாளிதழ்களில் படித்தோம்..
மேலும் தலித் மக்களும் சமமாய் கல்வி கற்றிட இந்திய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் சட்ட சாசனப்படி ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் உருவாக்கப்பட்டன.. 2013ம் ஆண்டு டி.ஆர்.பி ஆதிதிராவிடர்பள்ளிகளில் 669இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் உள்ளது என நோட்டிபிகேசன் விடப்பட்டு இன்றளவும் நிரப்பப்படாமல் உள்ளன.. காரணம் கேட்டால் ஒரே ஒரு வார்த்தையை மட்டும் கிழிந்த ரிக்கார்டு போல வழக்கு நிலுவையில் உள்ளது என சொல்லி காலம் கடத்துகின்றனர்..
அரசு நினைத்தால் விரைவாக முடிக்கலாம் ஆனால் அவர்களுக்கு நாற்காலி சன்டை போடுவதற்கே நேரம் சரியாக இருக்கிறது...நலத்துறைப்பள்ளிகளில் காலியாக உள்ள நாற்காலிகளுக்கு ஆசிரியர்களை நிரப்ப நேரம் இல்லையோ? என எண்ணத்தோன்றுகிறது..
இந்த வழக்கு சீக்கிரம் விசாரிக்கப்பட்டு ஆசிரியர்கள் பணியிடம் நிரப்ப வேண்டும் இல்லையேல் தலித் குழந்தைகளின் கல்வி உரிமைகள் மறைமுகமாக மறுக்கப்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை...
மத்தியஅரசு மட்டுமா தமிழகத்தை மாற்றான்தாய் மனப்பான்மையோடு பார்க்கிறது.. தமிழக அரசும் ஆதிதிராவிடர் மற்றம் கள்ளர் நலத்துறை பள்ளிகளையும் தான் மாற்றான்தாய் மனப்பான்மையோடு பார்க்கிறது...
ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் ஏதோ ஒரு கண்டன அறிக்கையை விட்டுவிட்டால் போதும் என நினைக்கிறார்கள்... அதோடு எல்லாம் முடிந்து விட்டாதா என்ன?????
தினசரி நாளிதழ்களும் தங்கள் பொறுப்பை மறந்து விட்டு ஏதேதோ செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து முன்னிலைப்படுத்துகிறார்கள் ஆனால் ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகளின் ஆசிரியர் இல்லாத அவலநிலையை விவரிக்க முன்வருவதில்லை ஏனோ??????
சமூகத்தில் பின்தங்கியவர்களும் சமமான நிலையும் அவர்களின் குழந்தைகளின் கல்விநிலை அடைய வேண்டும் என நினைத்த சட்டமேதை டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரின் பிறந்தநாள் விழா வரும் ஏப்ரல் 14 அன்று வருகிறது இந்நாளில் மாலை அணிவித்து விட்டு இனிப்புகள் வழங்கி சிலர் அரசியல் ஆதாயம் மட்டுமே தேட முயற்சிக்கின்றனர் ஆனால் அவரது கொள்கைகளை மறந்து விடுகின்றனர்..
மூத்த அரசியல்வாதிகளே பத்திரிக்கை நண்பர்களே ஊடகத்துறை கலைஞர்களே அம்பேத்கரின் பிறந்த நாளுக்கு முன்பதாக வரும் ஏப்ரல் 13 அன்று ஆதிதிராவிடர் நலத்துறை வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது அன்றாவது உயர்திரு தமிழக வழக்கறிஞர் ஆஜாவாராகளா???? அம்பேத்கர் கண்ட சமநீதி கல்வி உரிமை கனவு நிறைவேறுமா??? என எதிர்பார்க்கின்றோம்..... வரும் ஏப்பரல் 14 அன்றாவது ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் ஆசிரியர் இல்லாத அவல நிலையை வெளியிடுவீர்களா இல்லை அன்றும் அரசுக்கு சாதகமான செய்திகளை வெளியீவீர்களா???
இப்படிக்கு
பி.இராஜலிங்கம்
மாநிலப்பொருளாளர்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழகம்
I THNK DOUBT . BCOZ POLITICIANS MAIN AIM IS TO GET THE SEAT, IN HIGHER POSTING.......
ReplyDelete