Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கூகுள் தேடுஇயந்திரத்தில் நேபாள நில நடுக்கத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க புதிய வசதி


கூகுள் தேடுஇயந்திரத்தில் நேபாள நில நடுக்கத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க புதிய வசதி

     கடுமையான நில நடுக்கத்தால் நிலைகுலைந்து கிடக்கும் நேபாளத்தில் 37 தமிழர்கள் உள்பட இன்னும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிக்கித்தவித்து வரும் வேளையில் நேபாளத்தில் காணாமல் போன மக்களை கண்டுபிடிக்க சிறப்பு தேடுதளம் ஒன்றினை தேடுஇயந்திர ஜாம்பவானான 'கூகுள்' அறிமுகப்படுத்தியுள்ளது.

         இந்த தளத்தில் 'நான் இன்னாரைத் தேடுகிறேன்'  (I'm looking for someone) என ஒரு பெட்டியும், 'என்னிடம் இன்னாரைப் பற்றிய தகவல் உள்ளது' (I have information about someone) என ஒரு பெட்டியும் இடது-வலதுப்புறத்தில் உள்ளது. தேடப்படும் நபரின் பெயரை இடதுப்புற பெட்டியிலும், தகவல் கிடைக்கப்பெற்ற நபரைப் பற்றிய விபரங்களை வலதுப்புறப் பெட்டியிலும் உலகின் எந்த மூலையில் இருந்தும், யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்.
இந்த தகவல்கள் அனைத்தும் உலகில் உள்ள எல்லா நாட்டு மக்களையும் ஓரிரு நொடிகளுக்குள் சென்று சேர்ந்துவிடும். எஸ்.எம்.எஸ். மூலமாகவும் இந்த பெட்டிகளுக்குள் தகவல்களை பதிவு செய்யலாம்.

நேபாளத்தில் வசிப்பவர்கள்  Text "search <name>" என பதிவிட்டு 6040 என்ற எண்ணுக்கும், இந்தியாவில் இருப்பவர்கள்  Text "search <name>"  என பதிவிட்டு +91-9773300000 என்ற எண்ணுக்கும், அமெரிக்காவில் இருப்பவர்கள் text "search <name>"   என பதிவிட்டு +1 650-800-3978 என்ற எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்து தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம்.

இந்த தேடுதளத்தில் இதுவரை சுமார் 10 ஆயிரம் பதிவுகள் வந்து சேர்ந்துள்ளன. இருப்பினும், இதில் பரிமாறப்படும் விபரங்களின் நம்பகத்தன்மையை நாங்கள் சரிபார்ப்பதில்லை. எனவே, அது தொடர்பான விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive