தமிழகத்தில் பொதுத் தேர்வுகள்
தொடங்கப்பட்டதும், முடிவுகள் வெளியாகும் தேதிகள் மற்றும் அதற்கான
அறிவிப்புகள் அனைத்தும் வியாழக்கிழமையை மையமாக கொண்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5-ம் தேதி
தொடங்கி 31-ம் தேதி முடிவடைந்தது. அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு
மார்ச் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி முடிவடைந்தது. இந்த இரு
பொதுத் தேர்வுகளும் வியாழக்கிழமைகளில் தொடங்கியது
.
இந்த நிலையில் பொதுத் தேர்வு முடிவுகள்
வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு
மே 7-ம் தேதியும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு மே 21-ம் தேதி
வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு பொதுத் தேர்வு முடிவுகளும்
வியாழக்கிழமைகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Thursday is special for GURU
ReplyDelete