சிவில் நீதிபதி
தேர்வில் நாமக்கல்லைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் தமிழக அளவில்
முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு
பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ். இவரது மனைவி ஜெய்சூரியா.
இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இவரது மகள்
விபிசி(25), திருச்செங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 முடித்து
விட்டு திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் பிஎல் படித்தார். இதையடுத்து
திருச்செங்கோடு நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். கடந்த
ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சிவில் நீதிபதிக்கான தேர்வை எழுதினார்.
தமிழகம் முழுவதும் இந்த தேர்வினை மொத்தம் 6172 பேர் எழுதினர்.
இதில் 590 பேர்
மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அவர்களிடம் நேர்முக தேர்வு, சான்று
சரிபார்த்தல் ஆகியவற்றில் 314 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், விபிசி
323.75 மதிப்பெண் பெற்று, தமிழக அளவில் முதலிடம் பெற்று சாதனை
படைத்துள்ளார். அவரை திருச்செங்கோடு குற்றவியல் நீதிபதி சண்முகம் உட்பட
பலர் வாழ்த்தினர். இது குறித்து விபிசி கூறுகையில், தனது வெற்றிக்கு
பெற்றோரும், பயிற்சியாளர்களும், ஊக்குவித்த வழக்கறிஞருமே காரணம் என்றார்.
Congrts.
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteசாதித்தமைக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎந்த ஒரு சூழல் இருந்தாலும் நீதியை நிலைநாட்ட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொண்டு, தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். திறமையை மேலும் மெருகூட்டி உச்சநீதிமன்றம் வரை சென்று பணியாற்ற வாழ்த்துக்கள்
ReplyDeleteஎந்த ஒரு சூழல் இருந்தாலும் நீதியை நிலைநாட்ட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொண்டு, தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். திறமையை மேலும் மெருகூட்டி உச்சநீதிமன்றம் வரை சென்று பணியாற்ற வாழ்த்துக்கள்
ReplyDelete