Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற கடன் கூட்டுறவு வங்கி-தெரிந்து கொள்ளுங்கள்

கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற கடன்
        கூட்டுறவு வங்கி 100 ஆண்டு கால வரலாறு உடையது. கூட்டுறவு வங்கிகள் இந்திய நிதி முறையில் பங்கு வகிக்கின்றது. அதன் பணிகளை செவ்வனே செய்தல், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தல், நிறைய அலுவலகங்கள் மூலம் பணிகளைச் செய்வது போன்றவை இதில் அடங்கும்.
 
          கூட்டுறவு வங்கிகளின் பணி கிராமப்புற நிதித் தேவைகளில் இன்றளவும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. சமீபகாலமாக நகர்ப்புற பகுதிகளில் தொடக்க கூட்டுறவு வங்கிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் தொழில் துறையும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
இந்தியாவில் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் கூட்டுறவு சங்க விதியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரத ரிசர்வ் வங்கி, கூட்டுறவு வங்கிகளை ஒழுங்குமுறை செய்யும். இவை அனைத்தும் வங்கி ஒழுங்குமுறை விதி 1949 மற்றும் வங்கிகள் விதி (கூட்டுறவு சங்கங்கள் விதி ) 1965 ஆகியவற்றின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
கூட்டுறவு கடன் அமைப்பு தான் மாநிலத்தில் தனிப்பெரிய நிறுவனக் கடன் வழங்கும் முறையாக விளங்குகிறது. கிராமப்புற மக்களுக்கு கூட்டுறவு வங்கிகள் குறைந்த அளவு வட்டி விகிதங்களில் கடன் வழங்குகிறது. இதன் மூலம் விவசாயிகள் முறையற்ற கடன் வசதிகளான அதிக வட்டிக்கு கடன் வாங்குவது மிகவும் குறைக்கப்படும். சமூக ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும் இந்த நிறுவன முறை விவசாயிகள் கடன் பெறுவதற்கு ஏற்றதாக இருக்கின்றது.
சிறு தவணைக் கடன் அமைப்பு
நீண்ட தவணைக் கடன் அமைப்பு
நகர்ப்புற கூட்டுறவு கடன்கள் (யு.சி.பி)
கூட்டுறவு கடன் அமைப்பு மூலம் அமல்படுத்தப்படும் திட்டங்கள்.
தமிழ்நாட்டில் கூட்டுறவு கடன் அமைப்புகள் கீழ்க்கண்ட முறைகளை உள்ளடக்கியுள்ளது.
1) சிறு தவணை மற்றும் நடுத்தர தவணைக் கடன் அமைப்புகளில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி மாநில அளவிலும், மத்திய கூட்டுறவு வங்கி மாவட்ட அளவிலும் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கிராம அளவிலும் தலைமை வங்கியாக விளங்குகின்றது.
2.) நீண்டகால தவணை மற்றும் கிராம கடன் அமைப்புகளில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கி மாநில அளவிலும் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி தாலுக்கா / வட்டார அளவிலும் தலைமை வங்கியாக விளங்குகிறது.
3.) நகர்புற கடன் அமைப்புகளில் கூட்டுறவு நகர்புற வங்கிகள் நகர்ப்புறம் மற்றும் சிறு நகர்புற பகுதிகள் ஆகியவற்றில் உள்ள மக்கள் மற்றும் உறுப்பினர்களுக்குக் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது.
1.) சிறுதவணை கடன் அமைப்பு
சிறுதவணை கூட்டுறவு கடன் அமைப்பு தமிழ்நாட்டில் 3 அடுக்கு அமைப்பாக தமிழ்நாடு மாநில தலைமை வங்கி மாநில அளவில் 45 கிளைகளுடனும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, மாவட்ட அளவில் 717 கிளைகளுடனும், 4474 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கிராமப்புற அளவிலும் செயல்படுகிறது.
i) தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி லிமிடெட் (டி.என்.எஸ்.சி.பி) சென்னை
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் பேரவையாக விளங்குகிறது. தலைமை வங்கியாக இருப்பதால், இது ஆதாரம் மற்றும் வழிகளை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத தேவைகளுக்கும் உதவுகிறது. இது நபார்டு வங்கி அளிக்கும் மறுநிதியளிப்புகளை, சிறு தவணை மற்றும் நடுத்தர தவணையாக விவசாயம் மற்றும் அதன் சார்ந்த துறைகளுக்கான கடன்களுக்கு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்குகிறது.
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி நிதியை தொடக்க கூட்டுறவு மேம்பாட்டு நிதியாக பராமரித்து வருகிறது. இந்த நிதி மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை வங்கியின் தொகை மூலம் பெற்று செயல்பட்டு வருகிறது. இந்த நிதி மாநிலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்த உபயோகப்படுத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
ii) மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (டி.சி.சி.பி)
மத்திய கூட்டுறவு வங்கிகள் மாவட்ட தலைமையிடம் அல்லது மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் இருக்கும். இந்த வங்கிகளுக்கு சில தனிநபர்கள், நிதி மற்றும் நிர்வாகம் இரண்டையும் வழங்குவர். மத்திய கூட்டுறவு வங்கிகள் மூன்று நிதி ஆதாரங்களைப் பெற்றுள்ளது.
அவர்களது சொந்த முதலீட்டு பங்குகள் மற்றும் இருப்புகள்
பொது மக்களிடம் இருந்து பெற்றுள்ள வைப்பு நிதி
மாநில கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து பெற்றுள்ள கடன்கள்.
இதன் முக்கிய செயற்கூறுகள் தொடக்க கடன் சங்கங்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள், சாதாரண வணிக வங்கிகளின் தொழில்களையும் சேர்த்து செய்தல். அதாவது பொது மக்களிடம் இருந்து வைப்பு நிதிகளை ஈர்த்தல் மற்றும் பணம் தேவைப்படுவோர்க்கு அவர்களின் பாதுகாப்புக்காக பத்திரங்களை வைத்துக்கொண்டு கடன் அளித்தல்.
மாநிலத்தில் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் 77 கிளைகள் உள்ளது. இவை அனைத்தும் கிராமப்புற பகுதிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற பொது மக்களுக்கு சேவை செய்வதற்காக அமைந்திருக்கும்.
இவை பால் பண்ணை, கைத்தறி, சர்க்கரை மற்றும் இதன் சார்ந்த இதர கூட்டுறவுகள் ஆகியவற்றின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றது. இவை மட்டுமின்றி வேளாண் சாராத தேவைகளுக்கு, பொது மக்களுக்கு நேரடியாக இந்த வங்கி கிளையின் சேவைப் பகுதிக்குள் இருப்பின் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
iii) தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் (PACB)
தமிழ்நாட்டில் 4474 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் உள்ளது. இவை விவசாயிகளுக்கு கடன் உதவிகள், உரங்கள் வழங்குதல் மற்றும் பொது விநியோக முறையில் உள்ள கிளைகளை நடத்துதல் ஆகியவற்றை செய்து வருகிறது. இந்த வங்கிகள் சிறு தவணை மற்றும் நடுத்தரத் தவணை கடன்களை விவசாயம் மற்றும் அதன் சார்ந்த தொழில்களுக்கு வழங்குகிறது. சிறு தவணை கடன்கள் 12 முதல் 15 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் மற்றும் நடுத்தர தவணை கடன்கள் 3 முதல் 5 வருடங்களில் திருப்பிச் செலுத்துதல் வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
2.) நீண்ட கால தவணை கடன் அமைப்பு
நீண்ட கால தவணை கடன் அமைப்புகள் தலைமை வங்கி அதாவது தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கி - சென்னை, 180 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகள் தாலுக்கா / வட்டார அளவிலும் கொண்டுள்ளது. இந்த நிதி நிறுவனங்கள் உறுப்பினர்களுக்கு முதலீட்டுக் கடன்களை சிறு பாசனம், தோட்டக்கலை, மலைப்பயிர்கள் மற்றும் இதர வேளாண்மை மற்றும் அதன் சார்ந்த துறைகளுக்கு வழங்குகிறது.
i) தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி (TNCSARDB)
தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி கடன் வழங்குவதற்கு சாதாரண மற்றும் சிறப்பு மேம்பாட்டுக் கடன் பத்திரங்கள் மூலம் நிதியை ஏற்படுத்தி வழங்குகிறது.
தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி அனைத்து தொடக்க வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகளுக்கும் முதன்மை வங்கியாகவும் விளங்குகிறது. இவை நீண்டகால கடன் தவணைகளை வேளாண்மை மற்றம் அதன் சார்ந்த தொழில்களுக்கு வழங்குகிறது. இவ்வங்கி 1929 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது 20 மண்டல அலுவலகங்கள், ஒன்று அல்லது இரண்டு மாவட்டங்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில் வரும்படி உள்ளது. தொடக்க வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகள் தாலுக்கா மற்றும் வட்டார அளவில் மாநிலம் முழுவதும் உள்ளவற்றை அனைத்தும் மாநில வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிக்கு இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கியின் முக்கிய நோக்கம் தொடக்க வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகளுக்கு நிதியளித்தல். வங்கி கீழ்க்கண்ட செயற்கூறுகளை எடுத்து மேற்கண்ட குறிக்கோள்களை அடைய முனைந்துள்ளது.
கடன் பத்திரங்கள் வெளியீடுகள்
வைப்பு நிதிகளை வாங்குதல்
தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கித் தேவைகளுக்கு நபார்டு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அங்கீகாரத்தின்படி கடன் வழங்கப்படும்.
பதிவாளர் குறிப்பிட்டள்ளதின் படி எந்த கூட்டுறவு வங்கிகளின் முகவராகவும் சில நிபந்தனைகளுடன் செயல்படலாம்.
இணைக்கப்பட்டுள்ள தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகளின் வேலைகளை மேம்படுத்துதல், உதவி செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்.
வங்கி நீண்டகாலத் தவணை மற்றும் நடுத்தரத் தவணை கடன்கள் வேளாண்மை மற்றும் அதன் சார்ந்த செயல்களான கோடோன் கட்டமைப்பு, கால்நடை கொட்டகை அமைத்தல், பண்ணை வீடு, நிலம் வாங்குதல் மற்றும் சிறு பாசன திட்டங்களான புது கிணறுகள் அமைத்தல், இருக்கின்ற கிணறுகளை ஆழப்படுத்துதல் ஆகியவற்றிற்கு வழங்குகிறது. அதுபோல நீண்ட தவணை கடன்கள் கால்நடைகள், மீன் வளர்ப்பு, மலைப்பயிர்கள், பண்ணை இயந்திரமயமாக்கல், பண்ணை சாராத் துறைகள் மற்றும் இதர பெரும் பாசனத் திட்டங்கள் ஆகியவற்றிற்கு வழங்குகிறது.
மாநில வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கி இரண்டு வகையான கடன் பத்திரங்களை நிதி திரட்டுவமற்காகவும் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வழங்கவும ஏற்பாடு செய்திருக்கிறது.
1. நபார்டு வங்கி மற்றும் மாநில மத்திய அரசுகள் பரிந்துரைத்த சிறப்பு வளர்ச்சி கடன் பத்திரங்கள்.
2. சாதாரண கடன் பத்திரங்கள் மாநில அரசு, மத்திய அரசு மற்றும் இதர நிறுவன முதலீட்டாளர்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்டது.
ii) தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகள் (PCARDB)
தாலுக்கா / வட்டார அளவில் மொத்தம் 180 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகள் உள்ளது. இவை விவசாயிகளுக்கு நீண்ட தவணை கடன்கள் திருப்பிச் செலுத்தும் காலம் 5 முதல் 15 வருடங்கள் வரை நீடிக்கும் வகையில் வழங்குகின்றனர். இவ்வங்கி வளர்ச்சித் திட்டங்களான சிறுபாசனம், மலைப்பயிர்கள் சாகுபடி, பலதரப்பட்ட தேவைகளான கோழிப்பண்ணை, பால் பண்ணை, பட்டுப்புழு வளர்ப்பு ஆகியவை திட்ட வடிவில் செயல்படுத்த கடன் வழங்கப்படுகிறது. இவை தேவையான நிதி உதவிகளை தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கியிடம் பெற்றுக் கொள்கின்றன. தற்போது மாநிலத்தில் 181 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகள் செயல்படுகின்றன.
இதர நிதி முகவர்களுடன் போட்டியிட்டு இதன் வாய்ப்புகளை விரிவுபடுத்திக் கொள்வதற்கு, தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகள் கைவினைஞர்கள், சிறு தொழில் முனைவோர் ஆகியோருக்கு கடன் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வங்கி சிறு சாலை போக்குவரத்து இயக்குநர்கள் கிராமப்புறங்களில் பயணிகள் வாகனங்கள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனம் வாங்கவும் கடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, 2007-08 ஆம் ஆண்டு, தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகள் மீண்டும் பண்ணை சாரா துறைகளுக்கும் மற்றும் நகைக் கடன்களும் வழங்குகின்றது.
அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து நபார்டு வங்கியிடம் இருந்து மறுநிதியளிப்பு வசதியை 2008-09 ஆம் ஆண்டு ஏற்பாடு செய்துள்ளது. தோட்டக்கலை, இயற்கை விவசாயம், நவீன தொழில்நுட்ப பண்ணையம், துல்லிய பண்ணையம், சிறு பாசனத் திட்டங்கள் நிறைந்த செயல்களான மலர் சாகுபடி, மருத்துவப் பயிர்கள் சாகுபடி, தரிசு நிலத்தில் சாகுபடி மற்றும் பண்ணை இயந்திரமயமாக்கல் ஆகியவற்றிற்கு விவசாய முதலீட்டுக் கடன் 2008-09 ஆண்டு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
நீண்ட கால கூட்டுறவு கடன் அமைப்புகள் சீரமைப்பு திட்டத்தின் படி பேராசிரியர். அ. வைத்தியநாதன் குழுவின் பரிந்துரைகள் இந்திய அரசு அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கோட்பாட்டின்படி, அரசு ஏற்கெனவே மறு சீரமைப்புத் திட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இதை நடைமுறைப்படுத்தினால் நீண்ட தவணைக் கடன் வழங்கும் அமைப்புகள் எதிர் நோக்கும் நஷ்டங்களைக் களைந்து, திரும்பவும் விவசாய முதலீட்டுக் கடன் மூலம் முக்கிய இடத்தைப் பிடிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
3.) நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் (UCB)
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், வங்கி மற்றும் கடன் வசதிகளை நகர்ப்புறம், சிறு நகர மக்களுக்கு வழங்குகிறது. தற்போது மாநிலத்தில் 120 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றது. பொது மக்களிடம் இருந்து வைப்பு நிதிகளைப் பெற்று, குறிப்பிட்ட தேவைகளுக்குக் கடன் வசதிகளை வழங்குகிறது. இவர்களின் கடன் வழங்கும் துறைகளில், சிறு வர்த்தகர்களுக்குக் கடன் வசதிகள், கைவினைஞர்கள், சிறு மற்றும் நடுத்தர வருவாய் உள்ள மக்கள், வீடு கட்டமைப்பு, தொழில், கல்வி, நுகர்வோர் மற்றும் இதரப் பண்ணை சாரா துறை செயல்களுக்கு வழங்குகின்றது.
கூட்டுறவு கடன் அமைப்பு மூலம் நடைமுறை படுத்தப்படும் திட்டங்கள்
விவசாய கடன்கள் தள்ளுபடி
பயிர் கடன்களுக்கு வட்டியில் மானியம் வழங்குதல்
நலிந்த பிரிவு மக்களுக்கு கடன் அளித்தல்.
பண்ணை சாரா கடன்களுக்கு வட்டியை குறைத்தல்
நகைக் கடன்கள்
கிசான் கடன் அட்டைத் திட்டம்
சிறுகடன் திட்டம்
சுய உதவிக் குழுக்களுக்கு உதவி செய்தல்
பெண் தொழில் முனைவோர் கடன் திட்டம்
வேலை செய்யும் பெண்களுக்கான கடன் திட்டம்
தாய்மை காலக் கடன் திட்டம்
தொழில் நெறிஞர் கடன் திட்டம்
தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் உறுப்பினர்களுக்கு வட்டியில்லா முதலீட்டுக் கடன்
பெண் உறுப்பினர்களுக்கு வட்டியில்லா முதலீட்டுக்கடன்
i) விவசாய கடன் தள்ளுபடி
அரசின் எதிர்பார்க்கப்படாத பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் மூலம் 31.3.2006 அன்று வரை நிலுவையில் இருந்த கூட்டுறவு வங்கிக் கடன்கள் பெற்ற லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் விவசாயிகள் கடன் தொல்லையில் இருந்து விடுபட்டது மட்டுமன்றி, கூட்டுறவு கடன் நிறுவனங்களுக்கு புது வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்த சாதனையைப் பின்பற்றி, இந்திய அரசு தற்போது பெரிய அளவிலான விவசாயக் கடன் தள்ளுபடியை 2008-09 வரவு செலவுக் கணக்கு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யும் பொழுது ரூ. 60,000 §காடி என்று அறிவித்துள்ளது.
இந்த பாராட்டத்தக்க நடவடிக்கை இந்திய அரசு விவசாயத் துறையில் பின்தங்கி இருப்பதில் இருந்து மேலும் வளர்ச்சி அடையத் தூண்டுகிறது. இதன் மூலம் இந்திய அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி தமிழ்நாட்டுக்கும் சேர்த்து என்றும் மற்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள தொகையை இந்திய அரசின் மூலம் ஈடு செய்து கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ii) பயிர் கடன்களுக்கு வட்டியில் மானியம் வழங்குதல்
2006-07 ஆம் ஆண்டு முதல் பயிர் கடன் வட்டி விகிதத்தில் மானியம் வழங்கி அதன் வெளியீடுகள் 9 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளிடம் கடனை சரியாக திருப்பிச் செலுத்தவேண்டும் என்ற ஒழுங்குமுறையை ஏற்படுத்த, தமிழக அரசு வட்டி விகிதத்தை 2 சதவிகிதம் அளவிற்கு 2007-08 ஆம் ஆண்டு முதல் மேலும் குறைந்துள்ளது. இதன் மூலம் பயிர்க் கடன்களை சரியாகத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்குக் கடன்கள் 5 சதவிகிதம் வட்டியில் வழங்க உத்திரவிட்டுள்ளது.
iii) பண்ணை சாரா கடன்களுக்கு வட்டி குறைத்தல்
நிலுவையில் உள்ள அனைத்து பண்ணை சாரா கடன்களுக்கும் 31.03.2001 – ன் படி அனைத்து கூட்டுறவு கடன் நிறுவனங்களிடம் பெற்ற கடன்களுக்கு அதன் வட்டி விகிதத்தை 12 சதவிகிதமாகக் குறைக்க ஆணை பிறப்பித்துள்ளது. அனைத்து தவணை கடந்த வட்டிகளை ஒரே முறையாக தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக கடன் பெற்றுள்ளவர், நிலுவையில் உள்ளவற்றிற்கு 25 சதவிகிதம் செலுத்த வேண்டும் மற்றும் சலுகைகள் வழங்கியுள்ளதைப் பெற்றுக் கொண்டு மீதம் உள்ள 75 சதவிகிதம் தொகையை குறிப்பிட்டுள்ள காலத்திற்குள் செலுத்தவேண்டும்.
iv) நகைக் கடன்
கூட்டுறவு வங்கிகள் நகைகளை வைத்து அதன் மீது விவசாயம் மற்றும் விவசாயம் சாரா தேவைகளுக்கு கடன் உதவிகளை வழங்கிறது. நகைக் கடன்கள் பொது மக்களிடம் மிகவும் பிரபலமானது மற்றும் வங்கிகள் இதன் மூலம் பாதுகாப்பாக இருப்பதுடனும் கடன் வாங்குவோர் எளிதாகப் பெற்றுக் கொள்வர்.
v) கிசான் கடன் அட்டைத் திட்டம்
கிசான் கடன் அட்டைத் திட்டம் விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் கடன் வழங்குவதும் மேலும் கடன் வழங்குவதில் உள்ள தாமதத்தைக் குறைக்கவும் வழிவகை செய்கிறது.
vi) நலிந்த பிரிவு மக்களுக்கு கடன் அளித்தல்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் நலிந்த பிரிவு மக்களுக்கு கடன் வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்துகிறது. நபார்டு வங்கி 30 % குறையாமல் சிறு தவணை கடன்களை, கூட்டுறவுகள் மூலம் 5 ஏக்கருக்கு குறைவாக உள்ள சிறு விவசாயிகளுக்கு வழங்க உத்திரவிட்டுள்ளது. மேலும், 14 சதவிகிதம் கடன் அளவு சிறு தவணை கடன் வழங்கவும் மற்றும் 30 சதவிகிதம் நடுத்தர தவணை கடன்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
vii) சிறு கடன் திட்டம்
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கியின் திட்டத்தை சிறு மற்றும் குறு வர்த்தகர்கள், தெரு வியாபாரிகள், மலர்கள், காய்கறிகள், பழங்கள், பெட்டிக் கடைகள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருபோர்களுக்கு நடைமுறை படுத்தப்படுகிறது. இவர்கள் கந்து வட்டி கொடுப்போரிடம் பணம் பெற்று சிக்கித் தவிக்கும் சூழலில் ஏற்படுத்தபவர்களில் முக்கியமானவர்கள். இவர்களின் கடன் தேவைகள் மிகவும் குறைவு, ஆனால் அது மிக முக்கியமானவை. அரசின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் பல வருடங்களாக ஒழுங்குபடுத்தப்பட்டவை. இத்திட்டத்தின் கீழ் எந்த பாதுகாப்பும் இன்றி ரூ. 5,000 வரை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தை மேலும் கடன் அட்டை வழங்கி (அதன் பயனீட்டாளர்களுக்கு) அதை சுய உதவிக்குழுவாக ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
viii) சுய உதவிக் குழுக்களுக்கு உதவி அளித்தல்
நிதி உள்ளீடுகளில் உறுதிப்படுத்துவதற்கு சுய உதவிக் குழுக்கள் மூலம் அளிப்பது மிகவும் சிறந்ததாக அமையும். வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்துதல் இதன் மூலம் நல்ல நன்மையே கிட்டும் மற்றும் இதில் குறைவான பரிவர்த்தனைச் செலவுகளே அமையும். பல்வேறு திட்டங்கள் மற்றும் அரசு உதவியளித்த திட்டங்களுக்கு, நிதியை சுய உதவிக் குழுக்கள் மூலம் வழங்கப்படுகின்றது.
ix)பெண் சுய தொழில் முனைவோர் கடன் திட்டம்
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் கடன்களை ரூ. 10 லட்சம் வரை வழங்குகிறது. இதை 60 மாதத் தவணைகளில் 12 சதவிகிதம் வட்டியில் பெண் சுய தொழில் முனைவோர்க்கு சிறு அளவிலான தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த சேவை செயல்களை எடுத்துச் செய்தல் போன்றவை.
x) வேலை செய்யும் பெண்களுக்கான கடன் திட்டம்
இத்திட்டத்தின் கீழ், மாவட்ட மத்திய வங்கிகள் மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் கடன் உதவிகளை ரூ. 1.00 லட்சம் வரையிலும் 12 சதவிகிதம் ஒரு வருடத்திற்கு வட்டி விகிதத்திலும் வேலை செய்யும் பெண்களுக்கு மாத வருமானமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த கடனை 36 தவணைகளில் திருப்பிச் செலுத்தவேண்டும்.
xi) தாய்மை காலக் கடன் திட்டம்
கூட்டுறவு கடன் நிறுவனங்கள் தாய்மை கடன்களை கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 2000 வரை 11 சதவிகிதம் வட்டி விகிதத்தில் வழங்குகிறது.
xii) தொழில்நெறிஞர் கடன் திட்டம்
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தொழில்நெறிஞர் கடன்களை மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு ரூ. 10 லட்சம் வரை 12 சதவிகிதம் வட்டி விகிதத்தில் ஒரு ஆண்டுக்கு வழங்குகிறது. இந்த கடனை 15 வருட காலத்திற்குள் திருப்பிச் செலுத்தவேண்டும்.
xiii) தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் உறுப்பினர்களுக்கு வட்டியில்லா முதலீட்டுக் கடன்
தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினருக்கு கடன் வாங்கும் சக்தியை அதிகரிக்க, வட்டியில்லா கடன்களை ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகிறது. இதையே திரும்பவும் 2008-09 ஆம் ஆண்டு தொடரச் செய்து, ரூ. 20 லட்சம், 8,000 தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் உறுப்பினர்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் ரூ. 250 ஒரு நபர் வீதம் மற்றும் ரூ. 5 லட்சம், 1000 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் உள்ள உறுப்பினர்களுக்கு ரூ. 500, ஒரு நபர் வீதம் என்று வட்டி இல்லா பகிர்வு முதலீட்டுக்கடன் வழங்கப்படும்.
xiv) பெண் உறுப்பினர்களுக்கு வட்டியில்லா முதலீட்டுக் கடன்
கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்கள் கடன் பெறும் சக்தியை அதிகரித்தல் வேண்டும். இதற்கு பங்கு முதலீட்டுத் தொகையில் அதிகரித்தல் வேண்டும். கிராமப்புற பெண்களின் ஏழ்மையான நிதி நிலைமையைப் பார்த்து, பொதுவாக நலிவடைந்த வர்த்தகத்தை சேர்ந்தவர்களுக்கு, அரசு வட்டியில்லா பங்கு முதலீட்டுக் கடனை, சாதாரண கடன் வாங்கும் அளவு 20 முதல் 40 மடங்கு பங்கு முதலீட்டுத் தொகையைப் போல வழங்கப்படுகிறது. இந்தத் தொகை 5 தவணைகளில் கடன் வழங்கிய அடுத்த ஆண்டில் இருந்து திருப்பிச் செலுத்தவேண்டும்.
வட்டியில்லா பங்கு முதலீட்டுக் கடன்களை பெண் உறுப்பினர்களாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தொடக்க கூட்டுறவு வங்கிகள் மூலம் உடல் ஊனமுற்றோர், ஆகியோருக்கும் 2008-09 ஆம் ஆண்டும் வழங்க விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதே போல தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் உள்ள 2000 பெண் உறுப்பினர்களுக்கு வட்டியில்லா பங்கு முதலீடுகள், ரூ. 500 விகிதத்தில் வழங்கவும், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகளில் 500 பெண் உறுப்பினர்களுக்கு ரூ. 1000 என்ற விகிதத்தில் மற்றும் கூட்டுறவு நகர்ப்புற வங்கிகளில் 1000 பெண் உறுப்பினர்களுக்கு ரூ. 500 என்ற விகிதத்திலும் மற்றும் 1000 உடல் ஊனமுற்றோர்களுக்கு ரூ. 500 என்ற விகிதத்தில் மேற்கண்ட வங்கிகளில் வழங்கப்படுகிறது.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive