தமிழகத்தில் அளவுக்கு அதிகமாக பிஎட் கல்லூரிகள் இருப்பதால், இனி புது
கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க விதிமுறைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும்.
மேலும், அவசியம் மற்றும் தேவை இருந்தால் மட்டுமே புதுக் கல்லூரிகளுக்கு
தமிழகத்தில் அனுமதி வழங்கப்படும் என்று ஆசிரியர் கல்விக் குழு தலைவர்
சந்தோஷ் பாண்டா தெரிவித்தார்.
‘‘பல்கலைக்கழகங்கள், தொழில் நிறுவனங்கள், சமூகம் ஆகியவற்றை
இணைத்து சிறந்த மனிதா–்களை உருவாக்குவது’’ குறித்த மூன்று நாள் பன்னாட்டு
கருத்தரங்கம் சென்னை புதுக் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இதில்,
பல்கலைக்கழக மானியக்குழு துணை தலைவர் தேவராஜ் முன்னிலை வகித்தாா், தேசிய
ஆசிரியர் கல்வி குழு தலைவர் சந்தோஷ் பாண்டா சிறப்புரையாற்றினாா்.
உயர்கல்வி துறை செயலர் அபூர்வா, தமிழ்நாடு ஆசிரியா் பல்கலைக்கழக
துணைவேந்தா் விஸ்வநாதன் உள்பட 440 பேர் பங்கேற்றனர்.
இதில், வங்கதேசம், பாகிஸ்தான், ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச்
சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியா–்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, இந்த
கருத்தரங்கில் சமா்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக
வெளியிட்டனா். தேசிய ஆசிரியர் கல்வி குழு தலைவர் சந்தோஷ் பாண்டா
பேசியதாவது: பிஎட் இரண்டாண்டு படிப்பு இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல்
அமல்படுத்தப்படும். இது மூன்று கல்வியாண்டுகளுக்கு அமலில் இருக்கும்,
பின்னா் மறுசீரமைக்கப்படும். மாநில அரசுகள் இதற்கு முழு ஒத்துழைப்பு தரும்
என நம்புகிறோம். இந்த விஷயத்தில் தமிழக அரசு கால அவகாசம் கேட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான ஆசிரியா் கல்வி நிறுவனங்கள் உள்ளன.
அதாவது 658 ஆசிரியா் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இதில் பல கல்லூரிகள்
செயல்படாமல் உள்ளது. இக் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள், ஆசிரியா–்கள்
பற்றாக்குறை, கட்டிட வசதியின்மை உள்பட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. ஆசிரியா்
கல்வியியல் என்பது ஒரு சமூக சேவையாகும். இந்த தொழிலில் முதலீடு செய்து,
அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் எண்ணம் வேண்டாம். தமிழகத்தில் அதிகமான
ஆசிரியா் கல்வி நிறுவனங்கள் இருப்பதால், இனி தமிழகத்தில் ஆசிரியா் கல்வி
கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்ற தேவை இருப்பின் மட்டுமே அனுமதி
வழங்கப்படும்.
இவ்வாறு அவா் பேசினாா்.
பல்கலைக்கழக மானியக்குழு துணை தலைவா் தேவராஜ் கூறியதாவது: கல்லூரிகளில்
சிறந்த கல்வியை வழங்கிட சிறந்த ஆசிரியா–்களை நியமனம் செய்திட வேண்டும்.
அதேபோல, பல்கலைக்கழகங்களுக்கு தொலைநோக்கு சிந்தனையுள்ள சிறந்த
துணைவேந்தா–்களை நியமனம் செய்யவேண்டும். பல்கலைக்கழக மானிய குழுவால்,
ஆசிரியரையோ, துணைவேந்தரையோ நியமனம் செய்ய முடியாது. இதனை தமிழ்நாடு அரசு
தான் செய்ய வேண்டும். எனவே, சிறந்த துணைவேந்தா் மற்றும் ஆசிரியா்
நியமனத்திற்கான வழிமுறைகளை அரசு செய்ய வேண்டும். இந்தியா முழுவதும் 450
தன்னாட்சி கல்லூரிகள் உள்ளன. அதில், தமிழகத்தில் தான் அதிகமாக 150
கல்லூரிகள் உள்ளது. கல்லூரிகளுக்கு தன்னாட்சி வழங்குவதற்கான கமிட்டி
அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி ஆய்வு செய்து தகுதியிருப்பின்
கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும். இந்த ஆண்டு தமிழகத்தில் 20
கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு
அவா் கூறினாா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...