அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (ஏப். 23)
முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஏப்ரல் 23 முதல் மே 31-ஆம் தேதி வரை
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஆகும். விடுமுறைக்குப் பிறகு, ஜூன் 1-ஆம் தேதி
பள்ளிகள் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான
தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும்
மாணவர்களுக்கான மூன்றாம் பருவத் தேர்வுகள் இப்போது நடைபெற்று வருகின்றன.
பெரும்பாலான மாவட்டங்களில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை தேர்வுகள்
முடிவடைந்துவிட்டன. ஒரு சில மாவட்டங்களில் புதன்கிழமையோடு (ஏப். 22)
தேர்வுகள் நிறைவடைவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்
பள்ளிகள் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை செயல்படும். இந்தப் பள்ளிகளுக்கு மே 1
முதல் 31-ஆம் தேதி வரை கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. அதேபோல்,
சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கும் ஏப்ரல் கடைசியிலிருந்து கோடை
விடுமுறை வழங்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...