தமிழகத்தை சேர்ந்த 27 ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமி ழக ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 ஆண்டுகளாக ஆர்ப்பாட்டம், போராட்டங்களை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த மாதம் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் பன்னீர் செல்வம் அழைத்தார்.
ஆனால் தலைமைச் செயலகம் வந்த ஆசிரியர்் சங்க பிரதிநிதிகளை நீண்ட நேரம் காக்க வைத்த முதல்வர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தாமல் திரும்ப அனுப்பிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் ஜக்டோ அமைப்பை மீண்டும் உருவாக்கி தொடர் போராட்டங்கள் நடத்த அறிவிப்பு விடுத்தனர். அதைத் தொடர்ந்து மாவட்டங்களில் பேரணிகளை ஆசிரியர்கள் நடத்தினர். அதற்கு பிறகும் அரசு ஆசிரியர்கள் பிரச்னை மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, மீண்டும் 27 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணா விரதம் இருக்க முடிவு செய்தனர்.
அதன்படி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த உண்ணா விரதம் நேற்று காலை தொடங்கியது. 27 ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த உண்ணா விரதத்தில் கலந்து கொண்டனர். அனைத்து ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைமை தாங்கினர். சென்ைன சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற உண்ணாவிரதத்தை, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் சங்க மாநில தலைவரும், ஜக்டோ உயர்மட்ட குழு உறுப்பினருமான சங்கரபெருமாள் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து சங்கரபெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும், போட்டி தேர்வுகளை ரத்து செய்து பணி மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
ஏற்கனவே, பேரணிகள் நடத்தப்பட்டுள்ளது. முதல்வரிடம் மனுக்களும் வழங்கப்பட்டுள்ளன. எனினும், தமிழக முதல்வர் இதுவரை எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. எனவே, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோம். இதற்கு பிறகும் ஆசிரியர்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். தற்போது, கோடை விடுமுறை காலமாக உள்ளதால், ஜூன் மாதம் பள்ளிகள் தொடங்கியவுடன் அனைத்து தரப்பு ஆசிரியர்களும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.
தகுதி தேர்வை ரத்து செய்ய சொல்லுரிங்களே, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை தெருவில் விட்டுடவா! திறமையான ஆசிரியர்களை வர வடுங்க சார்.
ReplyDeleteEVLOV TAN SALARY VENUM UNGALUKKU? ORU 1 LAKH MONTHLY PODUMA? NEENGA SEIRA VELAIKU MONTHLY 10000 PODUM. YEN MANASATCHI ILAYA UNGALUKKU?
ReplyDeleteநாங்கள் சம்பள உயர்வு கேட்கவில்லை.இழந்த உரிமைகளை தான் கேட்குறோம்
ReplyDeleteதகுதி தேர்வை ரத்து செய்ய சொல்லி போராடாதிங்க ஆசிரியர்களே! முடிந்தால் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் களுக்கு பணி வழங்க சொல்லி கேளுங்க!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletecongrats Mr.John baul and Mr.Tamil king. We TET teachers will not support this protest...
ReplyDeletewe continuously oppose this one....
we should prove our power to association.....
we work together for our future. because JACTO association is not for TET....!!
TET தேர்வில் தேர்ச்சி பெற்ற நாம், JACTO கூட்டமைப்பு நடத்தும் எந்த ஒரு போராட்டத்திற்கும் ஆதரவு தர கூடாது......!!!
ReplyDeleteமேலும், TET வெற்றி பெற்ற மற்ற ஆசிரியர்களையும் சேர்த்து '"TET நீக்க வேண்டும்" என்ற கோரிக்கையை நீக்க நம்மால் ஆனா எல்லா முயற்சிகளையும் செய்வோம்...
அடுத்து, JACTO கூட்டமைப்பு நடத்தும் எந்த ஒரு போராட்டத்திற்கும் கலந்து கொள்ளாது நமது எதிர்ப்பை தெரிவிப்போம்...!!