2015 - 2016-ம் நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான புதிய விதிகளை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருமானவரி செலுத்துவோர் வங்கி கணக்குகளின் எண்ணிக்கையை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கணக்கு வைத்துள்ள வங்கிகளின் பெயர்கள் ஐ.எப்.சி. குறியீடு, கடந்த நிதியாண்டில் இறுதியில் கணக்கில் உள்ள தொகை போன்றவற்றை வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யும் போது தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு முடிக்கப்பட்டிருந்தாலும் அது குறித்த விவரங்களை வருமான வரி செலுத்துவோர் கூற வேண்டும்.
மேலும் வெளிநாட்டு பயணங்கள் குறித்த விவரங்களையும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது குறிப்பிட வேண்டியது அவசியம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...