"கடல்சார் மற்றும் நாட்டிகல் சயின்ஸ்
படித்தால் கப்பல் துறையில் ஏராளமான பணியிடங்கள் காத்திருக்கின்றன" என
மாஸ்டர் மரைனர் கேப்டன் பால் பென்னட் சிங் தெரிவித்தார்.
மதுரையில்
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் 'கடல்சார் படிப்புகள், நாட்டிகல்
சயின்ஸில் எதிர்காலம்' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: உலகில் 90 சதவீதம்
சரக்கு போக்குவரத்து கடல்வழியாக நடக்கிறது. இது, இந்தியாவில் 77 சதவீதம்.
பல லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் ஏராளமான மரைன் இன்ஜினியர் பணியிடங்கள்
காலியாக உள்ளன. தற்போது மத்திய அரசு 200 சிறிய துறைமுகங்கள் அமைக்க
நடவடிக்கை எடுத்து வருகிறது. சேது சமுத்திர திட்டம் முடிவுறும்பட்சத்தில்
கடல்சார் மற்றும் நாட்டிகல் சயின்ஸ் துறையில், மேலும் ஆயிரக்கணக்கான
பணியிடங்களுக்கு திறமையான இன்ஜினியர்கள் தேவைப்படுவர். 2010ம் ஆண்டு முதல்
பெண்களும் இத்துறையில் சேர்க்கப்படுகின்றனர். நான்கு ஆண்டு படித்தவுடன்
அரசு மற்றும் தனியார் கப்பல் துறைகளில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம்
சம்பளத்தில் வேலை கிடைக்கும்.
பட்டம்
முடித்த பின் மத்திய அரசின் தரைவழி போக்குவரத்துக் கழகம் நடத்தும்
தேர்வில் தேர்ச்சி பெற்றால் முதன்மை கப்பல் இன்ஜினியராகும் வாய்ப்பு
கிடைக்கும். கப்பல் துறையில் உலகில் இந்திய மாலுமிகளுக்கு தான் அதிக தேவை
உள்ளது. 100 நாடுகளில் கப்பல் துறையில் பணியாற்ற இந்திய மாலுமிகளுக்கு
முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பு அளிக்கின்றனர். மதுரையில் ஆர்.எல்.,
இன்ஸ்டிடியூட்ஸ் ஆப் நாட்டிகல் சயின்ஸில், கடல்சார் மற்றும் நாட்டிகல்
சயின்ஸ் படிப்புகள் சிறந்த கட்டமைப்பு வசதியுடன் உள்ளன.
ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் காலியிடங்கள்: 'வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறையில் எதிர்காலம்' என்ற தலைப்பில் ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., இணை பேராசிரியர் ஈஸ்வரன் பேசியதாவது: பி.காம்.,மில் அக்கவுண்டிங், பிசினஸ் ஸ்டடிஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என பல பிரிவுகள் உள்ளன. இவை அனைத்தும் வேலைவாய்ப்பு அளிக்கும் படிப்புகள். வங்கியில், காப்பீடு மற்றும் நிதித்துறை தற்போது உலகளவில் விரிவடைந்து வருகின்றன. நாட்டின் 10 பெரிய துறைமுகங்கள், 200 சிறிய துறைமுகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்படவுள்ளது. இதன் மூலம் இத்துறைகளில் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். நாட்டில் 2015 முதல் 2017 வரை வங்கி, இன்சூரன்ஸ், காப்பீட்டு துறைகளில் ஏராளமானோர் ஓய்வு பெறுகின்றனர். அடுத்த ஐந்து ஆண்டுகளில் வங்கியில் மட்டும் 10 லட்சம் காலிப் பணியிடங்கள் ஏற்படும். சிறந்த கட்டமைப்பு வசதியுள்ள, தகுதியான பேராசிரியர்கள் உள்ள கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும்.
ஹெல்த் சயின்ஸில் ஏராளமான படிப்புகள்: 'ஹெல்த் சயின்ஸ்' என்ற தலைப்பில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸின் பார்மசிஸ்ட் கல்லூரி முதல்வர் டாக்டர் ரவி பேசியதாவது: பிளஸ் 2 தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஹெல்த் சயின்ஸ் படிப்புகளை தேர்வு செய்யலாம். ஆண்டுதோறும் 30 ஆயிரம் டாக்டர்கள் உருவாகின்றனர். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4 லட்சம் டாக்டர்கள் தேவைப்படுவர். அதற்கு ஏற்ப ?ஹல்த் சயின்ஸ் படிப்பு முடித்தவர்களின் தேவையும் அதிகரிக்கும். மேலும் பல் மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஓமியோபதி படிப்புகளாலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும். தனியாக கிளினிக் நடத்தலாம். இத்துறைகளுக்கு அரசு அதிக நிதி ஒதுக்குகிறது. டிப்ளமோ மற்றும் நான்கு ஆண்டு மருந்தாளுனர்கள் படிப்பிற்கும் எதிர்காலம் உள்ளது. மருந்து கட்டுப்பாட்டுத் துறையில் உள்ள மருந்து ஆய்வாளர், ரத்த வங்கி கட்டுப்பாட்டு அலுவலர்கள் பணியிடங்கள் காத்திருக்கின்றன. மேலும் நர்சிங் படித்தால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நல்ல சம்பளத்தில் பணிகள் காத்திருக்கின்றன. இதுதவிர மெடிக்கல் ரெக்கார்டு மெயின்டனன்ஸ் ஸ்டடீஸ், ஆடியாலஜி, கார்டியாக் டெக்னாலஜி, கிரிட்டிக்கல் கேர் மற்றும் செயற்கை உறுப்புகள் பயன்பாடு போன்ற புதிய படிப்புகளிலும் மாணவர்கள் சேரலாம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...