சென்னையில் உள்ள தமிழக அறிவியல் மையத்தில், மாணவர்கள் மற்றும்
குடும்பத்தினருக்கு, ஒரு நாள் அறிவியல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் அய்யம்பெருமாள்
வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், மே, 7ம்
தேதி, 'அறிவியல் மையத்தில் ஒரு நாள்' என்ற நிகழ்ச்சி நடக்கிறது. காலை,
10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில், ஏழாம்
வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, தற்போது முடித்துள்ள மாணவர்கள், தங்கள்
பெற்றோருடன் பங்கேற்கலாம். மின்னணுவியல், வானவியல், உளவியல், காட்சிப்
பொருள் தயாரிப்பு எனப் பல வகை செயல்முறை வகுப்புகளும், புகழ் பெற்ற
அறிவியலாளர்களின் சொற்பொழிவும் நடைபெறும். மாணவர்கள் மற்றும்
குடும்பத்தினருக்கு, மதிய உணவு வழங்கப்படும்; பதிவுக் கட்டணம் இல்லை.
விருப்பமுள்ளவர்கள், tnstc@md5.vsnl.net.in என்ற மின்னஞ்சல் அல்லது
044-24410025 என்ற தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம். முதலில் வரும், 50
குடும்பங்கள் மட்டும் நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படும். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...