Home »
» புதுச்சேரி,சென்னை, கேரளாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. செல்போன் சேவை பாதிப்பு.
தில்லி மற்றும் வட மாநிலங்களில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை மற்றும் புதுச்சேரியிலும் இந்த நில நடுக்கம்
உணரப்பட்டது. புதுச்சேரி சவேரியார் பள்ளி அருகே நில அதிர்வு ஏற்பட்டது.
மக்கள் பீதிக்குள்ளாயினர். எனினும் சேதங்கள் குறித்த எந்த தகவலும்
தெரியவரவில்லை.
இந்தியாவின் வட மாநிலங்களில் இன்று முற்பகலில் பலத்த நிலநடுக்கம்
ஏற்பட்டது. இதனால், பீகார் மாநிலத்தில் செல்போன் சேவை முற்றிலும்
பாதிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் குறித்து தகவல் அறிந்ததும், உறவினர்கள் பலரும் தொலைபேசி
வாயிலாக உறவினர்களை தொடர்பு கொள்ள முயன்றதால், பல இடங்களில் செல்போன் சேவை
பாதிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் மற்றும் வட இந்தியாவில் ஒரு சில இடங்களில் நிலநடுக்கம்
ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7. 4 ஆக பதிவானதாக கூறப்படுகிறது. தில்லியில் 45
வினாடி இந்த நிலநடுக்கம் உணரப் பட்டுள்ளது.
ஜெய்பூர், ராஞ்சி, கவுகாத்தி, பாட்னா, நேபாள், ஒடிசா, பெங்கால், உத்தரப்
பிரதேசம் ஆகிய வடமாநிலங்களிலும் தமிழகத்தில் சென்னையிலும் நிலநடுக்கம்
உணரப்பட்டது. இதனால் மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
தில்லியில் நிலநடுககம் காராணமாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
தில்லியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுதான் மிகப்பெரிய நிலநடுக்கம் என
கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...