அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் மூத்த விரிவுரையாளர்
தேர்வு பட்டியலை, தமிழக ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.,
வெளியிட்டுள்ளது.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித் துறையின் மாநில கல்வியியல்
மற்றும் பயிற்சி நிறுவனத்தில், மூத்த விரிவுரையாளர் மூலம் சிறப்புப்
பயிற்சி தரப்படுகிறது. மூத்த விரிவுரையாளர்களை தேர்வு செய்யும்
நடவடிக்கையை, 2011ல் டி.ஆர்.பி., மேற்கொண்டது. ஆனால், இதில் பல குளறுபடிகள்
இருந்ததாக, டி.ஆர்.பி.,க்கு எதிராக பலர் வழக்குத் தொடர்ந்தனர்.
இதற்கிடையில், இரண்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, நான்கு
ஆண்டுகளுக்குப் பின், தற்காலிகத் தேர்வு பட்டியலை டி.ஆர்.பி.,
வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல், உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின்
முடிவுகளைப் பொறுத்தது என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
Saami... Ippo enakku vayasu aayitichi... En vellaiya en vaarisukku kudukka sattathula idam irrukka TRB board?
ReplyDelete