நாகப்பட்டினம் மாவட்டம் அக்க ரைப்பேட்டையில் மாநிலத்தில் முதன்முறையாக அரசுப் பள்ளி யில் ஸ்மார்ட் கிளாஸ் வசதியை நேற்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் இந்த வசதியை பெறும் முதல் அரசுப் பள்ளி என்ற பெருமையை பெறும் இப்பள்ளி, 2004-ல் ஏற்பட்ட சுனாமியில் முற்றிலும் சேதமானது. இப்பள்ளி மாணவர்கள் 80 பேரும் இந்த கிராம மக்கள் 650 பேரும் சுனா மிக்கு பலியாயினர். அப்படி பாதிப்புக்குள்ளான இவ்வூரும், இப்பள்ளியும் அந்தச் சுவடே தெரியாத அளவுக்கு சீரமைக்கப்பட்டு இன்று முன்னு தாரணமாகத் திகழ்கின்றன.
இணையதள வசதியுடன் கணினி வகுப்பறைகள் தொடங்க இவ்வூர் மக்கள் பங்களிப் பாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், அரசு பங்கேற்பாக ரூ.5 லட்சம் பெறப் பட்டு, இப்பள்ளியின் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலுமான அனைத்து வகுப்புகளும் நவீனமய மாக்கப்பட்டுள்ளன.
இணையதளம் மூலம் பாடங் களை மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற் சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழி கற்றல் வகுப்புகளில் 93 மாணவ, மாணவிகளுக்கு இணையதளத்தை பயன்படுத்தி எல்சிடி புரொஜெக்டர் மூலமாக திரையிடப்பட்டு, பாடம் கற்பிக்கப் பட உள்ளது. 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள 75 மாணவ, மாணவியருக்கு எளிமைப்படுத்தப் பட்ட படைப்பாற்றல் கல்வி மூலம் அனைத்துப் பாடங்களும் கணினி வாயிலாக கற்பிக்கப் பட உள்ளன. விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி, மாவட்ட வருவாய் அலுவலர் பெஞ்சமின் பாபு, மாவட்ட ஊராட்சித் தலைவர் சந்திரசேகரன், முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சுப்ரமணியன், அக்கரைப் பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் மனோகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இது போன்ற நல்ல திட்டங்கள் கால தாமதமின்றி அனைத்து வகைப் பள்ளிகளிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
ReplyDeleteஇது போன்ற நல்ல திட்டங்கள் கால தாமதமின்றி அனைத்து வகைப் பள்ளிகளிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
ReplyDelete