பஞ்சாப் மாநிலத்தில் மாணவியின் செல்போனை
பறிமுதல் செய்ததை அடுத்து, அவரின் தாய் பள்ளி நிர்வாக இயக்குனரை தாக்கிய
சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் உள்ளது
செயின்ட் சோல்ஜர் பள்ளி படிக்கும் மாணவி ஒருவர் செல்போன் வைத்திருந்ததை
கண்டுபிடித்த ஆசிரியர் அதனை பறிமுதல் செய்தார். மகளின் செல்போன் பறிமுதல்
செய்யப்பட்டதை அறிந்த மாணவியின் தாய் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களுடன்
வாக்குவாதத்தில்
ஈடுபட்டார். பின்னர்
பள்ளி நிர்வாக இயக்குனரின் அறைக்கு சென்ற அவர் தனது மகளின் தவறை
கண்டிக்காமல் பள்ளி நிர்வாக இயக்குனரான பெண்ணை அடித்து, தலைமுடியைப்
பிடித்து இழுந்தும் ரகளையில் ஈருபட்டார். இந்த காட்சி சிசிடிவி கேமராவில்
பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் பற்றி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...