Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தோலையே கரும்பலகையாக பயன்படுத்தும் அதிசய ஆசிரியர்: பாடம் படிக்க வரிசையில் நிற்கும் மாணவர்கள்

பிரித்தானியாவில் பேராசிரியர் ஒருவர் தனது உடலின் தோலையே கரும்பலகையாக பயன்படுத்தி பாடம் எடுத்தி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும்போது பாடம் தொடர்பான விளக்கங்களை எழுத்து வடிவில் கற்பிக்க வெள்ளை அல்லது கரும்பலகைகளை ஆசிரியர்கள் பயன்படுத்துவது வழக்கம்.
ஆனால் பிரித்தானியாவில் உள்ள East Anglia பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக பணியாற்றி வரும் Zoe Waller(31) என்பவர் இதில் சற்று வித்தியாசமானவர்.

மாணவர்களுக்கு பாடம் எடுப்பதற்கு வெள்ளை அல்லது கரும்பலகை என எதையும் பயன்படுத்தாமல், தனது கையில் உள்ள தோலையே கரும்பலகையாக பயன்படுத்தி வருகிறார்.

வெள்ளை பலகையில் என்ன வரைய வேண்டுமோ அதை, ஒரு பென்சில் எடுத்து தனது கை தோலை கீறி படமாக வரைந்து, மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்.
பென்சில் அல்லது பிற கூர்மையான குச்சியை எடுத்து கை தோலில் கீறும்போது, அதே வடிவில் தோலில் வீக்கம் ஏற்பட்டு அது ஒரு வரைபடமாக மாறுகிறது.
பேராசிரியர் எந்த அளவிற்கு அழுத்தம் கொடுக்கிறாரோ அந்த அளவிற்கு அவரது தோலும் ஈடுகொடுத்து செயல்படுகிறது.

இந்த செயலால் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மாணவர்களையும் வியப்பில் ஆழ்த்தியிருப்பதற்கு ஒரே காரணம் அவருக்கு urticaria(அரிக்கும் தடிப்புகள் கொண்ட தோல் வியாதி) என்ற வியாதி உள்ளது.

இந்த வியாதியால் பாதிக்கப்பட்டால், அவரது எந்த உறுப்பில் உள்ள தோல் மீது கீறினாலும் தடிப்புகள் ஏற்பட்டு சிறிது நேரத்திலேயே மறைந்து விடும்.
இது பற்றி பேராசிரியர் Zoe Waller கூறுகையில், இந்த அபூர்வமான அம்சம் எனது தோலில் இருப்பது எனக்கு வித்தியாசமான அனுபவத்தை தருவதுடன், அவ்வாறு செய்யும்போது சிறிதளவு வலியும் ஏற்படாது என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் வித்தியாசமான முறையில் பாடம் எடுப்பதால், இவரிடம் பாடம் பயில அதே துறையை சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive