பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் ஆசிரியர்கள் போராட்டம் அரசியலாகியுள்ளது. வரும், 12ம் தேதி, 'ஜாக்டா' நடத்தும் உண்ணாவிரதத்தில், தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., உட்பட, சில கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள்
பங்கேற்க உள்ளனர்.
தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து, தனியார் பள்ளிகள் புதிதாகத் துவங்க அனுமதிக்கக் கூடாது, தமிழகத்திற்கு தனிக் கல்விக் கொள்கை கொண்டு வர வேண்டும், தொகுப்பூதிய ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதில், 'ஜாக்டோ' ஆசிரியர் கூட்டுக்குழுவைப் போல், 'ஜாக்டா'
கூட்டுக்குழுவும் தனியாக போராட்டங்களை அறிவித்துள்ளது. இக்குழுவின் நிர்வாகிகள் கூட்டம், சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. அதில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில், வரும், 12ம் தேதி நடத்த உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை, கட்சிகள் ஆதரவு பெற்று தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, உண்ணாவிரதத்தில், தி.மு.க., - தே.மு.தி.க., - காங்., - பா.ம.க., - பா.ஜ., - ம.தி.மு.க., - த.மா.கா., மார்க்சிஸ்ட் கம்யூ., உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்பதாக, 'ஜாக்டா' கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் இளமாறன் தெரிவித்தார். இதனால், எதிரணியில் உள்ள ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், அரசு அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போராட்டத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க உள்ளதால், போராட்டத்தை எப்படி நிறுத்தலாம் என, பள்ளிக் கல்வித் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...