தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள்சங்க மாநில செயலாளர் குமரேசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு கணினியை ஒரு பாடமாக மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் 2011ம் ஆண்டு சமச்சீர் கல்வி அறிமுகம் படுத்தப்பட்டது. அப்போது நகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் 6 , 8 மற்றும் 10 வகுப்புகளுக்கு கணிப்பொறி இயல் என்ற பாட புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் காரணமாக மூன்று ஆண்டுகளாக கணிப்பொறி இயல் பாட புத்தகத்தை மாணவர்களுக்கு வழங்காமல் அரசு நிறுத்தி விட்டது. இதனால் தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டகணினியில் பி.எட் முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு அரசு பணி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, வரும் கல்வி ஆண்டில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியலை கட்டாய பாடமாக்கி, கணினியில் பி.எட் முடித்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். மேல் நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். வட்டார வளமையங்களில் காலியாக உள்ள கணினி அலுவலர் பணியிடங்களில், கணினியில் பி.எட் முடித்தவர்களை பணி அமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். முதற்கட்டமாக நாளை திண்டுக்கல் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
soonly arrange in krishnagiri dt
ReplyDeletewith exam or without exam?
ReplyDelete2006 la 880 computer instructor posting exam base la posting kuduthaargal.( adhil 652 per pani neekkamum seiyappattu ullargal )appodhu idhe Comp.sci B.ed muditha pattadhaarigal 100 kkum kuraivaanavargal mattume aarpaattm seidhu arrest aanaargal. appodhu enge poneergtal indha cs pattadhaarigal.?
ReplyDeleteinraikku poradum cs pattadhaarigal anraike onru serndhu poraadi irundhaal anaivarukkume nanmai kidaithu irukkum?
ReplyDelete