அமெரிக்காவின்
ஸ்பான் போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒருநிமிடத்தில் முழுவதுமாக சார்ஜ்
ஆகும் புதிய ரக பேட்டரியை கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது
செல்போன்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் மற்றும் அல்காலின்
பேட்டரிகளுக்கு பதிலாக அலுமினியம் பேட்டரியை புதிதாக வடிவமைத்துள்ளனர்.
எனவே இதில் அதிவிரைவாக சார்ஜ் செய்ய முடியும் மேலும் இதில் தீப்பிடிப்பது
போன்ற அபாயம் இருக்காது.
மற்ற
பேட்டரிகளை போல சுற்றுச்சூழலையும் இந்த அலுமினியம் பேட்டரி கெடுக்காது.
அதுவிலை மலிவானது. இவற்றை வளைக்கவும், மடிக்கவும் முடியும். செல்போன்
மட்டுமின்றி லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்களில் இதை
பயன்படுத்தலாம்.
அது
செல்போன் மற்றும் பேட்டரி தயாரிப்பு துறையில் ஏற்பட்டுள்ள புரட்சியாக
கருதப்படுகிறது. இந்த தகவலை விஞ்ஞானிகள் குழு தலைவர் ஹாங்கி டாஸ் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...