Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இயற்கை முறையில் கொசு ஒழிப்பு கருவி: கோவை பேராசிரியர் கண்டுபிடிப்பு

அதிகரிக்கும் கொசு உற்பத்தியை தடுத்து ஒழிக்க, உணவுக்கு பயன்படும் இயற்கை பொருள்களை மருந்தாக மாற்றி, புதிய கொசு ஒழிப்புக்கருவியை கண்டுபிடித்துள்ளார் கோவை பேராசிரியர்.
       
 
    சாதாரண இருமல் முதல் உயிர் பறிக்கும் டெங்கு, பன்றி காய்ச்சல் வரையிலான, கொடிய நோய்கள் பெரும்பாலும் கொசுக்களினால் தோன்றி பரவுகிறது. தேங்கி நிற்கும் நீரிலும், சாக்கடை கழிவுகளில் உற்பத்தியாகும் கொசுக்கடியினால், சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு, சில நேரங்களில் உயிரிழப்பும் உண்டாகிறது.மாநில சுகாதாரத்துறையும் கொசுக்களை ஒழிக்க, பல்வேறு மருந்துகளை சாக்கடைகளிலும், நீர் ஆதாரங்களிலும் கொட்டுகின்றனர். ஆனாலும், கொசு உற்பத்தி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பகல் மட்டுமல்லாது இரவு நேரங்களில் கொசுக்கடியால் மக்கள் அவதிப்படுகின்றனர். கொசுக்கடியில் இருந்து தப்பிக்கவும், கொசுவை விரட்டவும் சமீபகாலமாக பல்வேறு ரசாயன, பெட்ரோல் கலந்த கொசுவர்த்தி உள்ளிட்ட மருந்துகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.ஆனாலும், கொசுக்கள் ஒழிவதில்லை;மாறாக விரட்டப்படுகிறது. இதனால், நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இச்சூழலில், கோவை, சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பேராசிரியர் நாகேந்திரன், கொசுக்களை இயற்கை முறையில் ஒழிக்க மேற்கொண்ட நடவடிக்கையில், புதிய கருவியை கண்டு பிடித்துள்ளார்.

நாகேந்திரன் கூறுகையில்,''அதிகரித்து வரும் கொசுக்களை ஈர்த்து அழிக்கலாம் அல்லது விரட்டலாம். கொசுவர்த்தி புகை, கெரசின் போன்றவற்றால் கொசுக்களை விரட்ட மட்டுமே முடியும்; அவற்றை அழிக்க முடியாது. நோய்களை உருவாக்கும் கொசுக்களை அழிக்க ஈர்த்து அழித்தல் முறையே சிறந்தது.''கொசுக்களை அழிக்க பிளாஸ்டிக் 'டிரம்' ஒன்றின் உள்ளே பேட்டரி அல்லது மின்சாரத்தைப் பயன்படுத்தி, எரியும் அல்ட்ரா சோனிக் பல்புகளை பொருத்த வேண்டும். இதற்கு கீழாக, காற்றை உள் இழுக்கும் சிறு அளவிலான நான்கு காற்றாடிகள் பொருத்த வேண்டும். இதற்கு கீழான பகுதி முற்றிலும் மூடியிருக்க வேண்டும்.''வெளியில் இரண்டு லிட்டர் கொள்ளளவு கொண்ட பாட்டிலில் சர்க்கரை, சோடாஉப்பு, ஈஸ்ட் கரைசலை எடுத்துக்கொள்ள வேண்டும். இக்கரைசலில் இருந்து கார்பன்டை ஆக்சைடை உருவாக்கி, சிறு குழாய் வழியே கொசு அழிக்கும் அல்ட்ரா சானிக் விளக்குகள் எரியும் பகுதிக்கு செலுத்த வேண்டும். ''இந்த அல்ட்ரா சானிக் விளக்கு வெளிச்சத்துடன் 20 - 30 அடி துாரம் வரை, இக்கரைசலின் மெல்லிய வாசனை பரவும் தன்மை கொண்டது. ஈர்க்கும் தன்மை கொண்ட அல்ராசானிக் விளக்குகள் கொசுக்களை ஈர்க்கிறது. பறந்து வரும் கொசுக்கள் 'டிரம்'ல் உள்ள பெரிய துவாரங்கள் வழியாக உள்ளிழுக்கும் பேன்களுக்குள் விழுகின்றன.''வேகமாக ஓடும் பேன் காற்றால், கொசுக்களின் உடலில் இருக்கும் நீர் வேகமாக ஆவியாகி சில மணி நேரங்களில் இறந்துவிடுகின்றன. பொதுவாக வீட்டுவாசலில் வைக்கப்படும் இக்கருவியில், தினம், 1350 கொசுக்களில் இருந்து, 1500 கொசுக்கள் வரை சிக்கி அழிகின்றன. இக்கருவியை உருவாக்க வெறும், 1,000 ரூபாய் மட்டுமே செலவாகிறது.''இதை சாக்கடைகளின் அருகில் வைக்கும் பொழுது அதிகப்படியான கொசுக்களை அழிக்கலாம். நாளடைவில் கொசுவே இல்லாத நிலையை கொண்டு வரலாம்,'' என்றார்.




4 Comments:

  1. நல்ல செயல்கள் தான் இதை சாதாரண மக்களால் எவ்வாறு செய்வது என தெரியாது ? எனவே மிக குறைந்த விலையில் தயாரித்து விற்பனைக்கு வந்தால் நல்லது ! subramani villupuram

    ReplyDelete
  2. Super Idea. Congrats!

    ReplyDelete
  3. நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்! அதிக அளவில் இதைத்தயாரித்து கொசுவினை ஒழிக்க வேண்டும்

    ReplyDelete
  4. good effort.... procedure is dofficult to implement..

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive