அன்பான பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு...
தற்பொழுது இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கும் ரூ.10000 ஊதியம் மற்றும் 5 முழுவேலைநாட்கள் போன்ற செய்திகள் வெறும் வதந்திகளே !எந்த ஒரு நிச்சயத் தகவலானாலும் நமது "தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்செய்திகள்" -ல் ஆதாரத்துடன் வெளியிடப்படும்.
அது வேறு. இது வேறு. முன்னது நமக்கு என்றில்லை.எந்த ஒரு கடைநிலை ஊழியரானாலும் கொடுத்தே ஆகவேண்டியது. ஆனால் பின்னது முழுநேரஆசிரியர் நிரந்தரப்பணி. அதுபோன்று இதனையும் உடனடியாக எதிர்பார்க்க முடியாது.மேலும் இதில் நம்மை நிரந்தரப் படுத்த வேண்டுமெனில் பல சட்டச்சிக்கல்கள் உள்ளன.அவை அனைத்தும் சீர் செய்யப்பட வேண்டும்.இதுவரையிலும் நாம் சென்றுகொண்டிருக்கும் பாதை சரியானதே. எனவே நாம் இப்பொழுதுபொறுமையாகவும், அமைதியாகவும் இருக்கவேண்டியது அவசியம்.சங்கத்தின் சீரிய முயற்சியால் அரசின் நன்மதிப்பை நாம் பெற்றுள்ளோம். எனவே,நிச்சயமாக விரைவில் நல்ல செய்தியை தமிழக அரசிடமிருந்து எதிர்பார்ப்போம்.
மேலும், தகுதித்தேர்வு வைக்கவேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. ஆனால்,தேர்வு குறித்தோ வழிமுறைகள் குறித்தோ எந்த முடிவும் மேற்கொள்ளவில்லை.வெயிட்டேஜ், மதிப்பெண் தளர்வு ஆகியவற்றால் பல்வேறு வழக்குகள் நிலுவையிலுள்ளன.அதனால் டிஎன்பிஎஸ்ஸி மற்றும் டி இ டி போன்ற அரசுப்பணி நியமனங்களும்வழக்குகளின் பிடியால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.சற்றுப் பொறுமையுடன் செயல்படுவோம்.
இணைந்திருங்கள்.
வெற்றி நமதே !
பொன். சங்கர்
மாநில செய்தி தொடர்பாளர்
தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்
மாநில செய்தி தொடர்பாளர்
தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்
பகுதிநேர சிறப்பாசிரியர்களின் குழப்பத்திற்கு ஓர் விளக்கம்...
ReplyDeleteஅன்பான பகுதிநேர சிறப்பாசிரியர்களே !
கடந்த ஆண்டுகளில் நமது தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சேர்மன் திரு.சோலை M ராஜா அவர்கள் தலைமையில் மாநில அமைப்பாளர் திரு.கு.சேசுராஜா, மாநில துணை அமைப்பாளர் திரு.ஆனந்தராஜ், மாநில செயலாளர் கோவை திரு. ராஜா தேவகாந்த், மாநில பொருளாளர் திரு.நாகை ஜான்சன், மாநில செய்தித் தொடர்பாளர் திரு.பொன்.சங்கர் ஆகியோரின் தொடர்ந்த சீரிய முயற்சியாலும் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஒருங்கிணைந்த முயற்சியாலும் ஊதிய உயர்வு, பணியிட மாற்றம், இ.சி.எஸ். ஊதியமுறை ஆகியவற்றை நிறைவேற்றித் தந்துள்ளது.
நமது இடுகைத்தளம் "www.tptsta.blogspot.in" அதாவது "தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் செய்திகள்", முகநூல் பக்கம் "www.facebook.com/tnpsta", முகநூல் குழு "திருப்பூர் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் குழு", வாட்ஸ் அப் செயலி "TPTSTA - NEWS", "TIRUPPUR TPTSTA" ஆகிய இந்த ஊடகங்களின் பணி கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்திலுள்ள அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்களை கட்டி இழுத்து ஒருங்கிணைத்ததில் மிகப்பெரிய பங்கை ஆற்றியுள்ளது. ஒருங்கிணைந்த நமது சங்கத்தின் வளர்ச்சிக்கு ஊடகத்தின் சக்தி ஆதாரமானது.
எந்த ஒரு நிச்சயத் தகவலானாலும் தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் அதிகாரப்பூர்வமான இணையத்தளமான "தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் செய்திகள்" -ல் ஆதாரத்துடன் வெளியிடப்படும்.
நமது மிக முக்கிய இலக்கான "பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றம் செய்து பணி நிரந்தரம் செய்தல்" மற்றும் "ஊதிய உயர்வுடன் முழுநேரப்பணி" ஆகியவை குறித்து தமிழக அரசிடம் கோரிக்கைகளை நமது சங்கத்தின் சார்பில் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழகஅரசு அவற்றைப் பரிசீலித்து ஆவன செய்ய முயற்சித்து வருகிறது.
இதுவரையிலும் நாம் சென்றுகொண்டிருக்கும் சரியான பாதையை கட்டிக்காத்து வெற்றியை ஈட்ட வேண்டிய பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது.
சங்கத்தின் சீரிய முயற்சியால் அரசின் நன்மதிப்பை நாம் பெற்றுள்ளோம். எனவே, நிச்சயமாக விரைவில் நல்ல செய்தியை தமிழக அரசு அறிவிக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
இணைந்திருங்கள்.
ஒற்றுமை காப்போம் ! வெற்றி நமதே !
பொன். சங்கர்
மாநில செய்தி தொடர்பாளர்
தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்