தனியார் பள்ளிகளில், துவக்க வகுப்புகளில் தேர்ச்சி பெறாத குழந்தைகளுக்கு, மறு தேர்வு நடத்துவதும், அதிலும் தேறாதவர்களுக்கு, 'டிசி' வழங்குவதாக, மிரட்டல் விடுப்பதும், பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெயில் ஆக்க முடியாது:
கட்டாயக்கல்வி உரிமைச் சட்டப்படி, 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, பள்ளி ஆண்டு இறுதியில் தேர்வு நடத்துவதோ, அதன் அடிப்படையில், அக்குழந்தையை தோல்வி அடைய வைப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், எட்டாம் வகுப்பு வரை, எந்தவிதமான பள்ளியிலும், மாணவ, மாணவியரை, பெயில் ஆக்க முடியாது. அதே போல், மாணவர் சேர்க்கையில், நுழைவுத்தேர்வு உள்ளிட்ட எவ்வித நடைமுறைகளயும் பின்பற்றக் கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இவற்றை முன்னணி தனியார் பள்ளிகள், கண்டு கொள்வதேயில்லை. தமிழகத்தில் பல பள்ளிகளில், ஆண்டு இறுதி தேர்வு நடத்தி மதிப்பெண் அடிப்படையில், தேர்ச்சி பெறாதவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்ச்சி பெறாதவர்களின் பெற்றோரை வரவழைத்து, மறு தேர்விலும் தேர்ச்சி பெறாவிட்டால், 'டிசி' கொடுத்து விடுவோம்' என, பள்ளி நிர்வாகங்கள் மிரட்டல் விடுப்பதாக, பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, பெற்றோர் கூறியதாவது: அட்மிஷனுக்காக அலைமோதும் பள்ளிகளில், அவர்கள் வைப்பதே சட்டமாக உள்ளது. ஆண்டு முழுவதும் அதே பள்ளியில் படித்தும், மாணவன் இறுதித்தேர்வில், வெற்றி பெறாவிட்டால், அதற்கு பள்ளியின் கற்பித்தல் திறனையும், பள்ளி ஆசிரியர்களின் திறனையும் சுயமதிப்பீடு செய்திருக்க வேண்டும். ஆனால், பழி முழுவதையும் பெற்றோர் மீது சுமத்தி விடுகின்றனர். ஆண்டு இறுதி தேர்வில், தேறாதவர்களின் பெற்றோரை அழைத்து, 'உங்களுக்காக, உங்கள் குழந்தைகளுக்கு, மறு தேர்வு வைக்கிறோம். அதிலும், தேறவில்லையென்றால், பாஸ் செய்துவிட்டதாக, 'டிசி' கொடுத்துவிடுகிறோம். வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள். எங்கள் பள்ளி பெயரை கெடுத்துக்கொள்ள முடியாது' என, அறிவுறுத்துகின்றனர். இதனால், குழந்தைகளை மிரட்டி, அதட்டி, மறு தேர்வு எழுத தயார் படுத்த வேண்டியுள்ளது.
கொடுமை நடக்கிறது:
நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கூட, இந்த கொடுமை நடக்கிறது. மாணவர்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படுவதால், இது பற்றி புகார் தருவதில்லை. கல்வித்துறை அலுவலர்களும், இதை கண்டுகொள்வதில்லை. இதனால், மாணவ, மாணவியர் மட்டுமல்ல, நாங்களும் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...