Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்வித்துறையில் விஷக்கொடுக்கு!

           அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது, நவீன மயத்திற்கான ஒரு திறவுகோல் ஆகும். இந்தத் திறவு கோலைத் திறந்து திறமையாகப் பயன்படுத்த அறிவாளிகளும், தொழில் நுட்ப நிபுணர்களும் அவசியம். அறிவியல் தொழில்நுட்பம் என்பது ஒட்டு மொத்த கல்வித் துறையின் ஒரு அங்கம்.
 
           எனவே அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி என்பதுஒட்டு மொத்த கல்வித் துறையின் வளர்ச்சியை உள்ளடக்கியதே ஆகும்.கல்வித் துறையின் வளர்ச்சி என்பது அது எந்த வகையான பாடத்திட்டங்களைக் கொண்டுள்ளது. எப்படிப்பட்ட போதகர்கள் பயிற்சியாளர்களாக அமர்த்தப்பட்டிருக் கிறார்கள் என்பதைப் பொறுத்தது ஆகும்.
கல்வித் துறையின் ஆய்வுகள், ஆராய்ச் சிகள், வெற்றிகள் என்பவை தனிப்பட்ட நபர்களின் திறமையால், முயற்சியால் மட்டுமே வருவது அல்ல. அது ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கிற சாதனை, வெற்றி ஆகியவற்றின் தொடர்ச்சியோடு, புதிய கூட்டுச் சிந்தனைகளும், கூட்டுத் திறமைகளும் இணைவது என்பது ஆகும்.அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி என்பது அறிவியல் அறிஞர்களின் படைப்புகள் மட்டும் அல்ல. அறிவியல்b தாழில் நுட்பத்தின் மகத் தான வளர்ச்சி என்பது உற்பத்தி சக்திகளின் மகத்தான வளர்ச்சி என்பதாகும்.
ஏனென்றால் அறிவியல் தொழில்நுட்பம் என்பது உற்பத்தி சக்திகளின் ஓர் அங்கம்.எனவே அறிவியல் தொழில்நுட்பம் உள் ளடக்கிய கல்வித் துறை என்பது உண்மையிலே அறிவியல் சார்ந்தும், உண்மையான வரலாறு சார்ந்தும், பல்வேறு சிந்தனைகள் மதிக்கப்படுவதுடன், ஒன்றுக்கொன்று உதவும் வகையிலான பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் வகையில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி என்ற அடிப்படையில் கல்வித் துறை செயல்பட வேண்டும்.உண்மையான தகவல்களை அறிவியல் பூர்வமான உண்மைகளை உண்மையான உற் பத்தி சக்திகளின் வளர்ச்சியைத் தடுக்கவோ, மறுக்கவோ முயல்வது என்பது அவர்களை மட்டுமல்ல நாட்டு மக்கள் அனைவருக்குமே அது பாதிப்பை ஏற்படுத்தி விடும்!
ஆனால் தற்போது ஆட்சியில் அமர்ந்திருப் பவர்களுக்கு இது பற்றிய கவலைகள், பொறுப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை!“ஒரு கருத்து நிலை ஏதாவது ஒரு வகையில் மக்களின் மனதில் இடம்பிடித்து, அதன் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டால் அந்தக் கருத்துநிலையே பொருளாதார சக்தியாக விளங்கி விடும்!” என்றார் மார்க்சிய மாமேதை ஏங்கெல்ஸ்.இதை அறிந்து கொள்ள, புரிந்துகொள்ள வேண்டியவர்கள் அறிந்திருக்கின்றார்களோ, புரிந்திருக்கின்றார்களோ இல்லையோ கருத்து முதல்வாதிகள், மதவாதிகள் இதை தெளிவாக அறிந்து, புரிந்து கொண்டிருக்கின்றனர்.
தங்களின் இந்துத்துவ, மதவாதக் கருத்துக் களை மக்களின் சிந்தனையில் எல்லா வழி களிலும், தொடர்ச்சியாக ஏற்றுவதன்மூலம் மக்களின் மனதில் அதை இடம்பெறச் செய்து, அதன் மூலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும் என்ற முனைப்புடன் செயலாற்றத் தொடங்கிவிட்டனர்.
உண்மைநிலை உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி பற்றியெல்லாம் இவர்களுக்கு கொஞ் சம்கூட கவலை இல்லை. தங்களுக்கு கிடைத்திருக்கும் அறுதிப் பெரும்பான்மை ஆட்சி அதிகாரத்தை தங்களின் மதவாத சித்தாந்தத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்திவிட வேண்டும். இந்த அறுதிப் பெரும்பான்மை என்பது மீண்டும் வருமா? என்பது கேள்விக் குறி என்பதால் இப்போதே இதில் முழுவேகம் காட்டி விட வேண்டும் என்று துடிக்கின்றனர்.இதற்காக இரண்டு முக்கியமான தளங்களை முதல் கட்டமாகக் கையில் எடுத்துள் ளனர்.
1. ஊடகத்துறை, 2. கல்வித்துறை.ஊடகத்துறை பெரும்பாலும் கார்ப் பரேட்டுகளின் கைகளில் இருப்பதால், கார்ப்பரேட்டுகளின் ஆதரவு ஆளும் பிஜேபி கட்சிக்கு இருப்பதால் ஊடகத்துறையை பயன்படுத்துவது என்பது கடினமான காரியம் அல்ல. ஆனால் கல்வித்துறையை அப்படி எளிதாகப் பயன்படுத்திவிட முடி யாது. ஒளிவுமறைவாக, சூட்சுமமாக, ஏமாற்றுதல்களுடன்தான் நிறைவேற்ற முடியும். அதற்கான செயல்முறைகளையும் வகுத்துச் செயல்படவும் தொடங்கிவிட்டனர்.
`அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக தொடக்கக்கல்வி முதல் உயர்நிலை மற்றும் மேல்நிலைக்கல்வி வரையிலும் அனைத்து மட்டங்களிலும் ஒரே சமயத்தில் கல்வித்துறையை மேம்படுத்த வேண்டும்‘ என்று முழக்கமிடுகின்றார்கள்.கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இது வெளிப்பூச்சு மட்டுமே! உள்ளே எத்தகைய பாடத்திட்டம்? கல்வி ஆணையங்களில் எத்தகைய பொறுப்பாளர்கள் மேம்படுத்தப்போவது எதை? என்பதுதான் இதன் உள்ளடி சூட்சுமம்!இந்துத்துவா, மதவாதக் கொள்கைகளை பாடத்திட்டத்தில் திணிக்கும் பணி வாஜ்பாய் ஆட்சியிலும் நடந்தது.
மோடி ஆட்சியிலும் இது தொடர்கிறது. கல்வி மற்றும் ஆய்வுத்துறைகளில் ஊடுருவி வரலாற்றை திருத்தும் வகையில் பாடத்திட்டம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற பொறுப்பை ஆர்எஸ் எஸ்சின் துணை அமைப்பான `சிக்ஷா பச்சாங் அந்தோலன சமிதி’ என்ற அமைப்பிடம் வழங்கப்பட்டுள்ளது. இதன் முழு விபரங்கள் தனிக்கட்டுரையாக எழுதப்பட வேண்டும்.`மதச்சார்பற்ற தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கருத்தாக்கங்களை மக்களின் சிந்தனையிலிருந்து வெளியேற்றிவிட்டு, அந்த இடத்தில், இந்துத்துவ, மதவாதச் சார்பு கருத்தாக்கங்களை ஏற்றுவதற்கான வகையில் கல்வி ஆணைகளை பாஜக அரசு மாற்றி அமைத்து வருகிறது.*
தேசிய ஆசிரியர் பயிற்சி ஆணையம் சூயவiடியேட உடிரnஉடை டிக கூநயஉhநச நுனரஉயவiடிn - (சூஊகூநு)1 முதல் 12ம் வகுப்பு வரையிலான கல்விப் பாடத்திட்ட, ஆராய்ச்சி மற்றும் உருவாக்க ஆணையம் - சூயவiடியேட உடிரnஉடை டிக நுனரஉயவiடிn சுந ளநயசஉh & கூசயiniபே - (சூஊநுசுகூ)மத்திய உயர் வகுப்பு பள்ளிகளுக்கான அங்கீகாரம் மற்றும் கண்காணிப்பு நிர்வாகம் - ஊநவேசயட க்ஷடியசன டிக ளுநஉடினேயசல நுனரஉயவiடிn (ஊக்ஷளுநு)ஆகிய கல்வி ஆணையங்களின் தலைவர் களாக இருந்தவர்களை நரேந்திர மோடி அரசு முற்றாக நீக்கிவிட்டது.
நாளந்தா பல்கலைக்கழக வேந்தராக அமெர்த்தியாசென் மீண்டும் நியக்கப்பட வேண்டும் என்று அதற்கான ஆட்சிக்குழு (ழுடிஎநசniபே க்ஷடினல) பரிந்துரை செய்தது. ஆனால் மோடியோ ஆட்சிக் குழுவையே அடியோடு மாற்றி அமைத்துவிட்டார்.விஞ்ஞானம் வளர்வதற்குப் பதில் அஞ்ஞானம் வளரப்போகிறது! அறிவியலைப் போதிப்பதற்குப் பதில் புரியாமையைப் போதிக்கப் போகின்றார்கள்.
வரலாற்றை முன்னோக்கிச் செலுத்தும் உற்பத்தி சக்தி வளர்ச்சிக்குப் பதில் வரலாற்றை பின்னோக்கித் தள்ளும் சக்திகள் வளரப்போகின்றன.இதுமட்டுமல்ல கோவிலுக்குள் கொடுமைகள் சாமியாடியது போன்று கல்வி நிறுவனங்களிலும் இத்தகைய கூத்து அரங்கேறுகிறது.
புதுதில்லியில் பாஜகவின் முக்கியத் தலைவர் ஒருவர் நடத்திவரும் கல்வி நிறுவனத்தில் “ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் பாஜகவில் உறுப்பினராகச் சேர வேண்டும்” என்று சுற்றறிக்கை விடப்பட்டிருக்கிறது.தலைநகர் தில்லியில் சர்வதேச பள்ளி என்ற கல்வி நிறுவனம் வசந்த்குன்ச் என்ற இடத்தில் இயங்கி வருகிறது. பாஜகவின் முக்கியப் பிரமுகர் `அகஸ்டின் பிண்டோ’ என்பவர் பினாமியாகக் கொண்டு இந்த நிறுவனத்தை நடத்தி வருகின்றார்.ஆசிரியர்கள், அலுவலர்கள், ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் பாஜகவில் சேரு வதுடன் ஒவ்வொரு வரும் மேலும் 10 பேரை கட்சியில் உறுப்பினராக இணைய வைக்க வேண்டும் என்று அதிகாரம் செலுத்தியதுடன், இதை மறுத்த ஆசிரியை ஒருவரின் இரண்டு மாதச் சம்பளமும் நிறுத்தி வைக்கப் பட்டுவிட்டது.பாஜகவினர் மற்றும் சங்பரிவாரங்கள் நடத்தி வரும் கல்வி நிறுவனங்களில் வெவ் வேறு வகையான இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகின்றன.இன்றைய பிரதமர் நரேந்திர மோடி தனது இளமைக் காலம் முதல் இன்றுவரையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிரத் தொண்டர். ஆர்எஸ்எஸ் அமைப்பு கோடு போடச் சொன் னால் அதை தலைமேல் ஏற்று ரோடு போடும் பணியைத் தானே மோடி செய்ய முடியும்!அரசின் கல்விக்கொள்கை, மதச்சார்பு அற்றத் தன்மையில் இருந்தால் மட்டுமே பாடத்திட்டங்களில் அவை பிரதிபலிக்க முடியும். எதிர்கால இந்திய சிற்பிகளான மாணவர்களின் சிந்தனையில் நஞ்சை ஏற்ற அனுமதிக்கக்கூடாது. இதை முறியடித்தே ஆக வேண்டும்.தலைநகர் தில்லியில் சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட மக்களின் விழிப்புணர்வு இந்தியா முழுவதும் பரவ வேண்டும்
.கட்டுரையாளர் : பத்திரிகையாளர் மற்றும் சமூகநல ஆர்வலர்நன்றி : ஜனசக்தி(ஏப்ரல் 2)




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive