மதுரை மாவட்டத்தில் ஆசிரியர்
பற்றாக்குறையால் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள்
திருத்தும் பணியிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மன
அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தேர்வுத் துறையின் சரியான திட்டமிடல்
இல்லாததால் மார்ச் 19ல் துவங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இழு...
இழு... என இழுத்து ஏப்.10ல் தான் முடிந்தது. இதன் பின் ஏப்.20 முதல்
வேலம்மாள், மகாத்மா, செயின்ட் மேரீஸ் மற்றும் பி.கே.என்., மெட்ரிக்
பள்ளிகளில் விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது. நான்காயிரம் ஆசிரியர்கள்
ஈடுபட்டுள்ளனர். மொழிப்பாடங்களில் 80 ஆயிரம் விடைத்தாள் வரை மதுரைக்கு
ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் திருத்தும் பணியை உடனடியாக துவங்காதது,
ஆசிரியர் பற்றாக்குறை போன்ற காரணத்தால் இப்பணியை தேர்வுத் துறை குறிப்பிட்ட
காலக்கெடுவிற்குள் முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பணிப்பளு காரணமாக
ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தில் உள்ளதாக சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
ஏப்.20ல் துவங்கி 25க்குள் திருத்தும் பணியை முடிக்க தேர்வுத் துறை
உத்தரவிட்டது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6, 7, 8 ம் வகுப்பு பாடம்
எடுக்கும் ஆசிரியர்கள், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பிற்கு எடுக்கும்
திறன் இருந்தும் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் திருத்தும் பணியில்
அவர்களை ஈடுபடுத்த முடியவில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் திருத்தும்
பணிக்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் இப்பணி ஏப்.28க்கும்
மேல் நீடிக்க வாய்ப்புள்ளது. பிளஸ் 2 தேர்வில் மொழிப்பாட தேர்வு
முடிந்தவுடன் விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்கி விடுகின்றன. இந்த
நடைமுறையை பத்தாம் வகுப்பிலும் கொண்டுவர வேண்டும் என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...