முதுபெரும்
எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஜெயகாந்தன்,80, 1934ல் பிறந்த இவர்,
ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். பின், 14 வயதில் வீட்டை விட்டு
வெளியேறி சென்னைக்கு வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலேயே
தங்கிய ஜெயகாந்தனுக்கு, மறைந்த தலைவர் ஜீவாவின் நட்பு கிடைக்க, முறைப்படி
தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். எழுத்தாளர்,
பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர், நாவலாசிரியர், வசனகர்த்தா, திரைப்பட
இயக்குனர் என, பன்முக திறமையை வெளிப்படுத்தினார். அவர் எழுதிய, 'சில
நேரங்களில் சில மனிதர்கள்' என்ற நூல் மிகவும் பிரபலமானது.
இலக்கிய
உலகின் மிக உயரிய, 'ஞான பீடம்' விருது பெற்ற, ஜெயகாந்தன், சென்னை
கே.கே.நகரில், குடும்பத்தாருடன் வசித்து வந்தார். கடந்த ஓராண்டாகவே உடல்
நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நேற்று கடுமையான காய்ச்சல் மற்றும்
மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று இரவு, 9:00 மணிக்கு அவர்
இறந்தார். ஜெயகாந்தனுக்கு மனைவி, மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
ஜெயகாந்தனின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள் மற்றும் அவரின்
ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காலணி
கடையில் துவங்கிய எழுத்துப் பயணம்: விழுப்புரத்தில் அவரது மாமா வீட்டில்
தங்கியிருந்த போது அவருக்கு பொதுவுடமைக் கோட்பாடுகளும், பாரதியின்
எழுத்துகளும் அறிமுகமாகின. பின் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு
குடிபெயர்ந்தார். அங்கு தனியார் அச்சகத்தில் பணியில் சேர்ந்தார். அதன் பின்
தஞ்சையில் காலணி விற்கும் கடையில் பணிக்கு சேர்ந்தார். இங்கு தான் அவரது
எழுத்து பயணம் துவங்கியது. சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன்
போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும்
அங்கீகாரமும் கிடைத்தன. 20ம் நூற்றாண்டில் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில்
ஒருவராக போற்றப்பட்டார். இவரது நாவல்களில் "உன்னைப் போல் ஒருவன், ஒரு
நடிகை நாடகம் பார்க்கிறாள், ஊருக்கு நூறு பேர், யாருக்காக அழுதான்,
புதுச்செருப்பு கடிக்கும் மற்றும் சில நேரங்களில் சில மனிதர்கள்' ஆகியவை
திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. சாகித்ய அகாடமி விருது, ஞான பீட விருது,
பத்ம பூஷன், ரஷ்ய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
உதவிப் பேராசிரியர் நேரடி நியமனத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் இடம்பெற்றுள்ளது.
தமிழக அரசு 28-5-2013 அன்று வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டது.
2013 நவம்பர் 25-ஆம் தேதி முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்புகள் நடைபெற்றன.
பின்னர், 2014 ஜூலை 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, 3-4-2009 தேதிக்கு முன்னர் எம்.ஃபில். முடித்த விண்ணப்பதாரர்களின் பணி அனுபவம் உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டு, கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த விவரங்களின் அடிப்படையில் இறுதித் தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தத் தகுதிப் பட்டியலிலிருந்து ஒரு பணியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதத்தில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.
இப்போது நேர்முகத் தேர்வு முடிந்து, இறுதியாக பணியிடத்துக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் முதன்மைத் தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், வரலாறு, புவியியல், சுற்றுலா, அரசியல் அறிவியல், உளவியல், சமஸ்கிருதம், சமூகவியல், விஷுவல் கம்யூனிகேஷன், இந்திய கலாசாரம், வணிகவியல் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்), வணிகவியல் (சர்வதேச வணிகம்) உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இதில் இடம்பெற்றுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி நியமன ஆணைகள் தனியாக வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...