அரசுப் பள்ளிகளில் அறிவியல் ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை,
அரசுத் தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரசு உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளிகளில், அறிவியல் ஆய்வக உதவியாளர் பணிக்கு, மத்திய அரசின்,
'ராஷ்டிரிய மத்யமிக் சிக் ஷ அபியான்' திட்டத்தில், 4,362 பேர் தேர்வு
செய்யப்பட உள்ளனர்.
10ம் வகுப்பு, அதற்கு இணையான கல்வித் தகுதியுள்ளோர் தேர்வுக்கு
விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு முடிக்காமல், அதை விட அதிகபட்ச கல்வி
பெற்றவர்கள், விண்ணப்பிக்க தகுதியில்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது.
* 10ம்
வகுப்பு முடித்து, 2014, ஜூலை 1ம் தேதி, 18 வயது முடிந்திருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர், அருந்ததியர் உள்ளிட்ட பட்டியலினத்தவர் அதிகபட்ச வயது 35, மிக
பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட
வகுப்பு முஸ்லிம் ஆகியோருக்கு 32, மற்ற
வகுப்பினர் 30.
ஆதரவற்ற விதவைகள் குறைந்தபட்ச கல்வித்தகுதியை விட, அதிக கல்வித்தகுதி பெற்றிருந்தால், உச்ச வயது வரம்பு இல்லை.
* முன்னாள்
ராணுவத்தினர் ஆதிதிராவிடர், பட்டியலினத்தவர், பழங்குடியினர்,
பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்,
சீர் மரபினர் உச்ச வயது வரம்பு 53. முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, 48 வயது.
= அதிகமாக
அருந்ததியர் இருந்தால், மீதமுள்ளவர்கள் ஆதிதிராவிடர் பட்டியலில்
நியமிக்கப்படுவர். குறைவாக இருந்தால், ஆதிதிராவிடர்கள் அதில்
நிரப்பப்படுவர்.
* தமிழ் வழியில் படித்தோருக்கு, 20 சதவீத முன்னுரிமை உண்டு
* மாற்றுத்
திறனாளிகளுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீடு உண்டு. மாற்றுத்திறனாளிகள்
இல்லாவிட்டால், அந்த இடங்கள் நடைமுறை விதிகளின்படி நிரப்பப்படும்.
* தேர்வுக்குப் பின், 1:5 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு ஆன் - லைனில்
அழைக்கப்படுவர். மூலச்சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், முதன்மைக் கல்வி
அலுவலர் குழு நேர்காணல் நடத்தி, மதிப்பெண் அடிப்படையில், இனவாரி சுழற்சி
மற்றும் முன்னுரிமையில் நியமனம் நடக்கும்.
* மாவட்ட
வாரியாக தேர்வுத்துறை சேவை மையங்களில், ஏப்ரல் 24 முதல் விண்ணப்பம்
பெறப்படுகிறது. மே 6ம் தேதி மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
* விண்ணப்பம் பெற சேவை மையங்களில், கணினிப் புகைப்படம் எடுக்கப்படும் என்பதால், தேர்வர்கள் நேரில் செல்ல வேண்டும்.
* பத்தாம் வகுப்பு, முன்னுரிமை, உயர்கல்வித் தகுதி சான்றிதழ்களை அசல் மற்றும் நகல்கள், வேலை வாய்ப்பு அட்டை கொண்டு செல்ல வேண்டும்.
* தேர்வு
கட்டணம் ரூ.100, சேவை கட்டணம் ரூ.50 ரொக்கமாக, தேர்வுத்துறை சேவை மையத்தில்
செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பட்டியலினத்தவர், ஆதரவற்ற விதவைகள்
மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு கட்டணத்தில் விலக்கு
அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வின் விவரங்கள், www.tndge.in என்ற
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...