Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பணி நியமனத்தில் போலி சான்றிதழ், கல்வி தகுதி குழப்பம்: டி.ஆர்.பி.,யை சமாளிக்க கல்வித்துறை திணறல்

போலி சான்றிதழ், முன்னுரிமை வழங்குவதில் சிக்கல் மற்றும் தகுதி நிர்ணய குழப்பம் போன்றவற்றால், புதிய நியமனங்களை நிறுத்தி வைக்க, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளன. குழப்பங்களை எப்படி தீர்ப்பது என, கல்வித் துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

அதிகரிப்பு:
டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., அமைப்புகளில், சமீப காலமாக, தொடர் புகார்கள் எழுந்துள்ளன. டி.ஆர்.பி.,யை எதிர்க்கும் வழக்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு; நீதிமன்றம் கண்டிப்பு போன்ற நிகழ்வுகள் தொடர்கின்றன.
* ஆசிரியர் தேர்வில், விதிகளை பின்பற்றவில்லை என, மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.
* மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன ஆசிரியர் தேர்வில், பார்வையற்ற பட்டதாரிகளுக்கு, உரிய ஒதுக்கீடு தரவில்லை. இப்பிரச்னையில், பள்ளிக் கல்வி செயலர் சபிதா, உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
* கடந்த, 2012 ஜூனில் நடந்த ஆசிரியர் தேர்வில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வித்யா என்பவருக்கு, போலி ஜாதி சான்றிதழில் ஆசிரியர் பணி தரப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இச்சான்றிதழை, திருவள்ளூர் உதவி கலெக்டர், ராகுல்நாத் ரத்து செய்துள்ளார்.
* அரசு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 1,093 உதவி பேராசிரியர் பணியிட நிரப்புதலில், தகுதியானோரை தேர்வு செய்வதில் குளறுபடி நடந்து, பின், சரி செய்யப்பட்டது.
* கணினி ஆசிரியர் நியமனத்தில், விதவைகள், கலப்பு திருமணம் புரிந்தோர் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கான முன்னுரிமை ஒதுக்கீட்டு குளறுபடியால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, 133 பேரின் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படி புகார்கள் தொடர்வதால், டி.ஆர்.பி.,யின் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் கண்டிக்கும் முன், போலி சான்றிதழ்களை நாமே கண்டுபிடித்து விடலாம் என, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதேபோல், டி.என்.பி.எஸ்.சி.,யிலும் குழப்பங்கள் அதிகரித்துள்ளன.
உத்தரவாதம்
* வேளாண் உதவி அலுவலர் பணியிடத்துக்கு, 'வெயிட்டேஜ்' மற்றும் தகுதி நிர்ணயித்ததில் புகார் எழுந்துள்ளது.
* கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களில், உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பின்பும், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை, பணி நியமனம் செய்யவில்லை. 'இனி, டி.என்.பி.எஸ்.சி., முறையாக செயல்படும்' என, நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்தப் பிரச்னைகளால், புதிய நியமனங்களை நிறுத்தி வைக்கவும், நியமன நடைமுறை, தகுதி அறிவிப்பு, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கல், சான்றிதழ் உண்மை தன்மைகளை மறு ஆய்வு செய்ய, டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளன. இதற்கு உரிய ஒத்துழைப்பு தருமாறு, கல்வித் துறைக்கு இந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதனால், பிரச்னையை எப்படி சமாளிப்பது என, கல்வித் துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.




3 Comments:

  1. குழப்பங்கள் & குளருபடிகள் வேண்டுமென்றே உருவாக்க படுகிறது போல தான் தோன்றுகிறது ....
    அப்படி இருந்தால் தானே பணி நியமனங்களை தாமதமாக்க முடியும் ...
    அரசு ஊழியர்களின் ஊதியம் அரசுக்கு மிச்சம் ...
    நாடு எக்கேடு கெட்டால் எனக்கென்னவோ போல இருந்தால் வாக்களிக்கும் போது "கல்தா" தான் . ...

    ReplyDelete
  2. Anybody willing to join in government aided school, 4vacancies for PG maths, 3 near chennai and 1 in Vizhupuram. 2vacancies for PG physics near chennai. 1 PG commerce and a PG zoology in chennai.

    Interested please mail your qualification and contact number to nancymary260@gmail.com

    ReplyDelete
  3. Trb thinam thinam oru mudivu edukum. Padichitu velaiku wait pandra nama ena mutala????

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive