Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு விரைவில் கொள்கை முடிவு

புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு விரைவில் கொள்கை முடிவுஎடுக்கவுள்ளது. இதையடுத்து, இந்த திட்டத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கு உடனடி யாக பணப்பயன்கள் கிடைக்கும். தமிழகத்தில் கடந்த 1.4.2003 முதல் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் (பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள் என 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி அரசு ஊழியர்களின் அடிப் படைச் சம்பளம், தர ஊதியம் மற்றும் அதற்கு இணை யான அகவிலைப்படி ஆகிய கூட்டுத்தொகையில் மாதம் தோறும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அதே அளவு தொகையை அரசு தனது பங்காகச் செலுத்தும். இவ்வாறு சேரும் தொகையில் 60 சதவீதம் ஊழியர் ஓய்வுபெறும்போது கொடுக் கப்படும். மீதமுள்ள 40 சதவீத தொகை, பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வூதியமாக அளிக்கப்படும். பழைய ஓய்வூதிய திட்டத்தில், பொது வருங்கால வைப்புநிதியில் (ஜிபிஎஃஎப்) ஊழியர்கள் தங்கள் தேவைக்கு முன்பணம் எடுக்கலாம். கடன் பெறலாம். ஆனால், இத்தகைய வசதிகள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் (சிபிஎஃப்) கிடையாது. புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த 12 ஆண்டுகளில் ஏறத்தாழ 25 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள், ஓய்வுபெற்றிருக்கிறார்கள். 
உயிரிழந்தவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள், பணியை ராஜினாமா செய்தவர்கள் ஆகியோரும் இந்தபட்டியலில் அடங் குவர். இதுவரையில் அவர் களுக்கு சிபிஃஎப் ஓய்வூதிய பயணப்பயன்கள் கிடைக்க வில்லை. மாதம்தோறும் சம்பளத்தி லிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை கூட கிடைக்கவில்லையே என்று அவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக அரசு தகவல் தொகுப்பு விவர மைய அதிகாரிகளிடம் விசாரித்தபோது, 
“புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து ஓய்வுபெற்றவர்கள், உயிரிழந் தவர்கள்குறித்த பட்டியலை அரசு கேட்டிருக்கிறது. எனவே, ஓய்வுபெற்ற ஊழியர் களுக்கும், உயிரிழந்த பணியா ளர்களின் குடும்பத்தி னருக்கும் சிபிஎஃப் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது” என்று தெரி வித்தனர். 
இதுகுறித்து நிதித்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து அரசு விரைவில் கொள்கை முடிவு எடுக்கவுள்ளது.மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வாய்ப்பில்லை. இந்தியாவில், புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படாத இரண்டு மாநிலங்களில் (திரிபுரா, மேற்கு வங்காளம்) திரிபுரா கூட அகில இந்திய பணி ஊழியர் களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவந்துவிட்டது” என்றார். புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்கும்பட்சத்தில், இந்த திட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்கள் கிடைக்கும். இதற்கிடையே, சிபிஎஃப் பணிகளை கருவூல கணக்குத்துறையிடம் ஒப்படைக்க முயற்சி நடப்பதாகவும் அரசு தகவல் தொகுப்பு மைய ஊழியர்கள் புகார்தெரிவித்தனர். துறை சீரமைப்பு என்கிற பெயரில் ஆட்குறைப்பு செய்யக்கூடாது, புதிதாக நியமிக்கப்பட்ட ஊழியர்களை வேறு துறைக்கு மாற்றம் செய்யக் கூடாது என்று தகவல் தொகுப்பு விவர மைய ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive