தமிழகம் முழுவதும், சத்துணவு ஊழியர்கள் நடத்தி வந்த காலவரையற்ற போராட்டம்,
நேற்று இரவு, வாபஸ் பெறப்பட்டது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள், சம்பள
உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 15ம் தேதி முதல்,
காலவரையற்ற போராட்டம் நடத்தி வந்தனர்.
ஆர்ப்பாட்டம், உண்ணவிரதம் மற்றும் மறியல்
போராட்டங்களும் நடந்தன. இந்த நிலையில், சத்துணவு ஊழியர்களின் போராட்டம்,
நேற்று வாபஸ் பெறப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்
சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'அரசு ஊழியர் சங்க மாநில நிர்வாகிகள்,
சமூக நலத்துறை அமைச்சருடன் பேசி உள்ளனர். இதைத் தொடர்ந்து, அமைச்சர் பேச்சு
நடத்த அழைப்பு விடுத்துள்ளார். 'இன்று நடக்கும் பேச்சில், கோரிக்கைகள்
ஏற்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால், காலவரையற்ற போராட்டத்தை வாபஸ்
பெறுகிறோம்' என, தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...