சத்துணவு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு கலைஆசிரியர்கள் நலச்சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்க நிர்வாகிகள் கூட்டம் கோவையில் நடந்தது.
சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சாந்தகுமார் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், சத்துணவு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்குஆதரவு தெரிவிக்கப்பட்டது. 'இப்போராட்டத்தால்,ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை கொடுக்க முடிவுசெய்துள்ள பள்ளி கல்வித் துறை, மாணவர்களுக்கு சமையல்செய்து சத்துணவு வழங்கும் பணியையும் ஆசிரியரிடமே ஒப்படைத்துள்ளது கண்டனத்திற்குரியது. முதல்வரும், பள்ளி கல்வித் துறையும், ஆசிரியர் அமைப்புகளையும், சத்துணவு ஊழியர்களையும் பேச்சுக்கு அழைத்து சுமுக தீர்வு காணவேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...