பொதுவாக, பணியில் சேரும் ஆசிரியர்களின் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்களையும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் வாங்கி தங்கள்வசம் வைத்துக்கொள்கின்றன.
இதுபற்றி கேட்டபோது, மெட்ரிகுலேஷன் கல்வி இயக்கக உயர் அதிகாரி ஒருவர்
கூறியதாவது: பணியில் சேரும்போது அசல் சான்றிதழ்களை ஆய்வுசெய்துவிட்டு
சான்றொப்பம் (அட்டஸ்டேஷன்) பெறப்பட்ட நகல்களை வைத்துக்கொள்ளலாம். மற்றபடி, ஆசிரியர்களின் அசல் கல்விச் சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொள்ள பள்ளி நிர்வாகங்களுக்கு அதிகாரம் இல்லை. இதுபோல,
அசல் சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொள்ளும் பள்ளி நிர்வாகங்கள் பற்றி
மாவட்ட கல்வி அதிகாரி, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர், உதவி தொடக்கக் கல்வி அதிகாரி போன்ற அதிகாரிகளிடம் புகார் செய்தால் தக்க நடவடிக்கை
எடுப்பார்கள்.
இந்த நடைமுறை அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு பொருந்துமா?அதாவது அரசு உதவி பெரும் பள்ளிகளில்(மேல்நிலைப்பள்ளிகளில்) அசல் சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் வைத்து கொள்ளலாமா?
ReplyDelete