அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களில் 4360 பேரை நியமிக்க
போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல்
வினியோகிக்கப்பட உள்ளன.
அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில் உதவியாளர்களை
நியமிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக போட்டித் தேர்வு
நடத்தி அதில் தேர்ச்சி அடைவோரை மட்டுமே நியமிக்கவும் முடிவு செய்துள்ளது.
இதற்காக 4360 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்களை அணுகி விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட பணிக்கு பத்தாம் வகுப்பு
கல்வி தகுதியாக வைக்கப்பட்டுள்ளது. 18வயதுக்கு மேல் இருக்க வேண்டும். மே
மாதம் 6ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள். மே 31ல் தேர்வு
நடக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...