திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஒடுகம்பட்டியில் சஞ்சீவி, 11, என்ற
மாணவரின் இருதய சிகிச்சைக்கு பள்ளி ஆசிரியர் கணேசன் நிதி திரட்டி
வருகிறார்.
நத்தம் அருகே ஒடுகம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. மனைவி சின்னம்மாள்.
இருவரும் கூலி தொழிலாளிகள். இவர்களது மகன் சஞ்சீவி. அங்குள்ள அரசு ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். ஓராண்டுக்கு முன்
உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் இதய வால்வில் அடைப்பு
ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
மாணவனின் குடும்பச்சூழலை அறிந்து, அப்பள்ளி ஆசிரியர் கணேசன், மருத்துவ
சிகிச்சைக்காக நிதி திரட்டி வருகிறார்.அவர் கூறியதாவது:- சிறுவயது முதல்
வறுமையில் வாழ்ந்து தற்போது ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். அதனால்
மருத்துவ சிகிச்சை, படிப்பு, வறுமையில் வாடும் மாணவர்களுக்கு உதவி செய்து
வருகிறேன். தற்போது வறுமையில் வாடும் சஞ்சீவியின் மருத்துவ சிகிச்சைக்காக
நண்பர்களிடம் நிதி திரட்டி வருகிறேன் என்றார்.
நீங்களும் உதவ 95854 45276ல் தொடர்பு கொள்ளலாம்.
Congratulations...
ReplyDelete