எல்.ஐ.சி. துணை நிதி நிறுவனத்தில் அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான
எல்.ஐ.சி.யின், துணை நிதி நிறுவனம் எல்.ஐ.சி. ஹவுசிங் பினான்ஸ் என்பதாகும்.
வீட்டுவசதி கடன் வழங்கும் நிறுவனமான இதில் தற்போது அசிஸ்டன்ட் மேனேஜர்
மற்றும் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு 93 பேரும், அசிஸ்டன்ட் பணிக்கு 200 பேரும்
தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 293 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 21 வயது பூர்த்தி
அடைந்தவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். 1-6-2014
தேதியை அடிப்படையாகக் கொண்டு இந்த வயது வரம்பு கணக்கிடப்படும். அரசு
விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனு மதிக்கப்படுகிறது.
கல்வித் தகுதி:
பட்டப்படிப்பில் 55 சதவீதம்
மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்தவர்கள் அசிஸ்டன்ட் மேனேஜர்
பணியிடங்களுக்கும், 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை நிறைவு
செய்தவர்கள் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
ஆர்.ஆர்.பி. வங்கி பொது எழுத்து
தேர்வு-3-ல் தேர்ச்சி பெற்று குறிப்பிட்ட மதிப்பெண் சதவீதம்
பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் தேர்வு முறைக்கு
அழைக்கப்பட்டு நேர்காணலுக்குப் பின் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
கட்டணம் :
விண்ணப்பதாரர்கள் ரூ.150 கட்டணமாக
செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். நெட் பேங்கிங் மற்றும் குறிப்பிட்ட
அட்டைகளை பயன் படுத்தி இந்த கட்டணம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள்
இணையதளத்திற்கு சென்று விண்ணப்பங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
30-4-15-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இறுதியில்
பூர்த்தியான விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதிகள் எடுத்து, அதில் ஒன்றை தேவையான
சான்றிதழ் நகல்கள் இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க
வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...