அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜூன் 1ம் தேதி பள்ளிகள்
திறக்கப்படும்.
இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் பிளஸ் 2
வகுப்புகளுக்கு மார்ச் 5ம் தேதி தொடங்கியது. பத்தாம் வகுப்புக்கான தேர்வு
மார்ச் 19ம் தேதி தொடங்கியது. மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 2வது
வாரத்தில் தொடங்கின. இந்நிலையில் பெரும்பாலான பள்ளிகளில் கடந்த வாரமே
ேதர்வுகள் முடிந்த நிலையில் சில பள்ளிகள் நேற்று வரை தேர்வு நடத்தியது.
இந்த கல்வியாண்டுக்கான இறுதி நாள் ஏப்ரல் 30ம் தேதி வரை உள்ளது. அதனால் சில
பள்ளிகள் 30ம் தேதி வரை பள்ளியை நடத்த முடிவு செய்துள்ளன. அரசு மற்றும்
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு 23ம் தேதி முதல் விடுமுறை விடலாம்
என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதை அடுத்து அரசுப் பள்ளிகளுக்கு இன்று
முதல் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதையடுத்து ஜூன் 1ம் தேதி மீண்டும்
பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளி திறக்கப்படும் நாளில் புத்தகங்கள் வழங்க
திட்டமிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...