Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பெண்களின் ஏற்றமும் ஆண்களின் கவலையும் - Article




ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை  ஆணும் பெண்ணும் சமம்ஆண்களும், பெண்களும் அடிமைகளாய் இருந்து காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு வந்துள்ளோம். சென்ற நூற்றாண்டு வரை அடிமைகளாய் இருந்த நாம் அடிமைத்தனம் எனும் அகங்காரத்தை ஒழித்துக் கட்டி, சுதந்திரம் எனும் சுயகௌரவத்தைப் பெற்றுள்ளோம்.  

         இன்று சுயாட்சியில் திளைக்கிறோம். இதற்காகப் பல்வேறு துன்பங்களை அனுபவித்தவர்கள் ஏறாளம். பெண்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட ஆண்களின் பங்கு அளப்பறியதாக இருந்து வருகின்றது. பெண்களுக்கு அதிரான அடக்கு முறைகளைக் கையில் எடுத்துப் போராடிய எத்தனையோ  ஆண்வர்க்கத் தலைவர்களை நாம் சுட்டிக் காட்டலாம். இப்போராட்டத்தில் சில பெண்களும் பங்கு கொண்டனர் என்ற செய்தி பலாச்சுளை  போன்றது. ஆனால் இன்றைய சூழலில் பெண்கள் தங்களுக்குரிய மதிப்பையும், மாண்பையும் நெஞ்சில்   நிலை நிறுத்துகிறார்களா? என்றால் அது வேம்பின் பைங்காய் போன்றது.

பெண்ணுரிமை, என்று வாய்நோகப் பேசுபவர்களெல்லாம் பெண்களுக்குரிய பண்புகளுடன் நடந்து  கொள்கிறார்களா? என்று சற்று நிதானித்தால், அது நம் நிதானத்தையே இழக்கச் செய்து விடுகிறது. ஒரு ஆண் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று மகளிர் மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றும் பெண்கள், தன்மானம் எவ்வாறு காக்க வேண்டும் என்ற கருத்தை சபையில் ஏற்றுவதில்லை. பெண்ணியம் பேசி முன் வரிசையில் அமர்ந்திருப்பவர்கள், பெண்களின் கண்ணியம் காப்பதில் பின் வரிசையில் தான் அமர்ந்திருக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில்  பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மலிந்து விட்டன என்று ஆய்வறிக்கை கூறுகின்றது. அதே நேரத்தில் பெண்கள் தங்களுக்குரிய பண்புகளையும், குணநலன்களையும் குறைத்துக் கொண்டனர் என்று யாரும் ஆய்வு செய்ய முன்வருவதில்லை. பாலியல் வன்முறைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பாலியல் வன்முறையைத் தூண்டுபவர்களுக்கு என்ன தண்டனை? பெண்கள் ஏன் இந்த அளவுக்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என்று செவி சாய்த்தால் அதற்குப் பெண்களே பெருங்காரணமாக அமைவர். அதற்கான காரணங்கள் நம் சமூகத்தில் மலிந்து கிடக்கின்றன. பெண் குழந்தை பிறந்தவுடன் அவளை மாடலாக வளர்க்கிறோம் என்ற பெயரில் கடையில் எந்தத் துணி விற்றாலும் வாங்கிக் கொடுத்து விடுகிறோம். குழந்தையின் உடலமைப்பிற்கு ஏற்றதா? குழந்தை அந்த ஆடையை ஏன் விரும்புகிறது? என்று சிந்திக்க வேண்டும். குழந்தைக்குப் பிடித்திருக்கிறது என்பதனாலேயே அது எவ்வளவு விலை இருந்தாலும், குழந்தைக்குப் போதாத வகையில், அதாவது உயரம் குறைவாக இருப்பினும் நாம் அதைப்பற்றி சிந்திக்காது வாங்கிக் கொடுத்து விடுகிறோம். அந்த ஆடையை அணிந்து கொண்டு செல்லும் குழந்தைக்கு இது நமக்கு ஏற்ற ஆடைதானா? என்பது அதற்கும் தெரியாது. ஆனால் மற்றவரின் பார்வை குழந்தை மீது எவ்வாறு இருக்கும், எத்தகைய நோக்கில் குழந்தையை அணுகுவர் என்ற புரிதல் பெற்றோருக்கு இருக்க வேண்டும். குறிப்பாகத் தாய்க்கு அந்த விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும். மேலும் குழந்தை தானே என்று மேம்போக்காக நினைப்பதும், குழந்தைக்கு உள்ளாடை மட்டும் அணிந்து விடுவதும் தவறான நோக்குதலுக்கும், நோக்கத்திற்கும் காரணமாகி விடுகின்றது.

பாலியல் வன்முறைக்கு எதிரான கடுமையான சட்டங்களைக் கொண்டு வரும் நீதிமன்றமும், பாராளுமன்றமும் பெண்கள் தங்களின் கண்ணியத்தைக் காப்பாற்றும் ஆடை வகைகளைப் பரிந்துரை செய்வதில்லை. மாறாக ஆண்கள் தவறான பார்வையுடையவர்கள் என்று மாதர் சங்கங்கள் கை உயர்த்துகின்றனர். எந்த வகையான ஆடை அணிவதும், எங்களது அடிப்படை சுதந்திர உரிமை என்று தாங்களே சட்டம் வகுத்துக் கொள்கின்றனர். ஆடை அணிவது சுதந்திர உரிமை எனில் எதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆடைக் கட்டுப்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது? அனைவருக்கும் ஒரே மாதிரியான சீருடை எனக் கட்டுப்பாடு விதிப்பது அவர்களின் ஆடை சுதந்திரத்தைப் பறிப்பதாகிவிடாதா? சற்று சிந்திக்கவும்...... .

ஆண்களின் நோக்கு தவறானது எனக் கூறுபவர்களுக்கு நாம் கூறுவது, என்னவென்றால் உளவியல் ரீதியாக ஆண்களோ (அல்லது) பெண்களோ எதிர் பாலினத்தவரிடம் ஈர்ப்புடையவர்களாக இருப்பர் என்ற உண்மையை யாராலும் மறுக்க இயலாது. இத்தகைய சூழலில் எதிர் பாலினத்தவரின் பார்வைக்குத்  நாம் அணிந்திருக்கும் உடை தவறானதாகத் தெரிந்து விடக்கூடாது எனத் தானே மன ரீதியாக உணர்ந்து தங்களுக்கு ஏற்ற சரியான வடிவமைப்பிலுள்ள ஆடைகளைத் தெரிவு செய்ய வேண்டும். பிறர் அணியும் ஆடை போல் அணிய எண்ணி அதைப் பின்பற்றும் கொள்கை, பல்வேறு விதமான எதிர் விளைவுகளை உண்டாக்குகிறது. தான் முதலில் சரியான வடிவமைப்பிலான உடைகளை அணிந்து கொள்ளாமல் பிறரைக் குறை கூறி, தான் மட்டும் சரி... என்ற வாதம் அப்பன் குதிருக்குள் இல்லைஎன்ற கதையாகிவிடும். இன்று பெண்களுக்காக உடை வடிவமைப்புகள் ஏராளம். அதில் தரமான மற்றும் கண்ணியம் காக்கும் உடைகளைத் தேர்வு செய்தாலே பெண்களுக்கான தரமும், கண்ணியமும் உயரும் என்பது திண்ணம்.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் போது இருந்த உடைக் கட்டுப்பாடு வேலைவாய்ப்பு என்று வந்தவுடன் அதை பின்னுக்குத் தள்ளி விடுகின்றனர். நாம் பிறர் கவரும் வகையில் உடை அணிய வேண்டும் என்று விரும்புகின்றனர். ஒரு ஆண் வேலைக்குச் செல்லும் போது முழுக்கைச் சட்டை அணிந்து செல்வதும், ஒரு பெண் வேலைக்குச் செல்லும்போது அரைக்கைச் சட்டையணிந்து செல்வதும் ஊரரிந்த உண்மை. அதிலும் சில பெண்கள் அணியும் சட்டையில் கையே இருப்பதில்லை. இத்தகைய உடைகள் உங்கள் கணவர், உறவினர் மற்றும் உங்களுக்குப் பழக்கப்பட்ட நபர்களுக்கு வேண்டுமானால் அது சாதாரணமான உடையாகத் தோற்றமளிக்கலாம். ஆனால் பொது இடம் என்று வரும் போது அத்தகைய தோற்றம் வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. பிறரின் கவனம் தன்மீது படும்படி உடைகள் அணியக்கூடாது. எத்தனையோ நடுத்தர வயதுடைய பெண்கள் சுடிதார் அணிந்து கொண்டு மேல் மறைப்புத் துணி இல்லாமல் பேருந்து நிலையங்கள் மற்றும் கோவில்களில் தங்களின் கணவரோடு வலம் வருவது நாம் கண்கூடாகப் பார்க்கும் காட்சியாகிவிட்டது????.

திரைப்பட உலகில் வரும் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ப ஆடை வடிவமைப்புகளை நாம் பார்த்திருப்போம். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமனார், மாமியார், மருமகன், மருமகள், அக்கா, அண்ணன், தங்கை, தம்பி, குடும்பப் பெண், ஊதாரி, நாட்டியக்காரி, சூத்திரக்காரி, பிச்சைக்காரி, ஆண்களை மயக்குபவள், ஆண்களால் மயங்குபவள், பொதுமகள் என்று அந்தந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப ஆடை வடிவமைக்கப்பட்டிருக்கும். இன்றைய உலகில் நாகரிகம் என்று கூறி பெண்கள் அணியும் உடைகளைப் பார்த்தால் மேற்கண்ட எந்த கதாப்பாத்திரத்திற்குப் பொருத்தமானவர்கள் என்று தாங்கள் அணியும் ஆடையைப் பொருத்துத் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து கொண்டால் நல்லது.

   ஊடகங்களில் பெண்கள் தவறாகக் காட்டப்படுகிறார்கள் என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. ஊடகங்களில் வரும் அனைத்து காட்சிகளும் பெண்களுக்குத் தெரியாமல் எடுத்துக்காட்டுகிறார்களா? அல்லது பெண்கள் தோன்றும் காட்சிகள் அவர்களின் அனுமதி இல்லாமல் எடுக்கப்படுகிறதா? விளம்பரங்களில் அதிகம் தோன்றுவது ஆண்களா? பெண்களா?...... இணையத்தில் தற்போது இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்று ஆய்வறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதே, அக்காட்சிகளில் நடித்த பெண்களுக்குத் தெரியாமலா இத்தனை வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளன?  இன்று ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே பாலியல் தொடர்பான உரையாடல்கள்  சாதாரணமாகிவிட்டது. அதற்கான வாய்ப்புகளை பெண்கள் அதிக அளவில் ஏற்படுத்தித் தந்து கொண்டிருக்கின்றனர். அரசு நல்ல நோக்கத்திற்காக மாணவர்களுக்கு  மடிக்கணினி திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம் என்று மார்தட்டிக் கொள்ளும் அதேவேளையில், பழுது நீக்க வரும் அரசு  மடிக்கணினிகளில் 60% மடிக்கணினிகள் ஆபாச வீடியோக்கள் பொதிந்துள்ளன என்று கணினி கடை உரிமையாளர்களும் அங்கு வேலை பார்ப்பவர்களும் கூறுகின்றனர்.  இந்த அறை கூவலில் அரசு விழித்துக்கொள்ளுமா??????????

     அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்று பெண்ணியவாதிகள் யாரும் கீழ்க்கண்ட வேலைகளில் சம உரிமையும், இடஒதுகீடும்(33%) ஏன் கேட்பதில்லை?

1.   ரேசன் கியூ (மதிய வெயிலில்)
2.   அரசுப் பேருந்துப் படியில் பயணம் (கூட்ட நெரிசலில்)
3.   மூட்டை தூக்கும் தொழில் (இரவு முழுவது கண்விழித்து)
4.   சாக்கடை சுத்தம் செய்யும் தொழில் (முழுவதும் மூழ்கி)
5.   மரம் ஏறும் தொழில் (60 முதல் 80 மரங்கள்)
6.   கொல்லுப் பட்டரைத் தொழில் (கை பலம் முழுவதையும் செலுத்தி)
7.   கொத்தனார் வேலை (கை வலியில் கலை)
8.   தச்சு வேலை (வைரத்தை துளையிடும் ஆற்றல்)
9.   எலக்ட்ரீசியன் (எந்த நேரத்திலும் தயாரான நிலை)
10. நடத்துனர் (கூட்ட நெரிசல்)
11. ஓட்டுனர் (கவனச் சிதைவின்மை)
12. மெக்கானிக் (குறை கண்டறிதல்)
13. ரீவைண்டிங் தொழில் (சரியான கட்டமைப்பு)
14. செல்போன் பழுது பார்த்தல் (கூரிய கவனம்)
15. கணினி பழுது பார்த்தல் (கூர்ந்த கவனம்)
16. சைக்கிள் கடை (பாதுகாத்தல்)
17. மளிகை கடை (அறுசுவை மணமும் ஒரே நேரத்தில் முகருதல்)
18. உணவகம் (நன்கு கவனித்தல்)
19. மின்சார வாரியம் (24 மணி நேர சேவை)
20. தோட்ட வேலை (பக்குவம்)
21. ஏர் உழுதல் (சிறப்பு)
22. நீர் பாய்ச்சுதல் (முறையறிதல்)
23. பார் இழுத்தல் (ஒழுங்கு)
24. உரமிடுதல் (தேவையான அளவு)
25. மாடு குளிப்பாட்டுதல் (இடமறிதல்)
26. இரவு நேரக் காவலர் (பாதுகாப்பு)
27. போக்குவரத்துக் காவலர் (அயராத பார்வை)
28. எல்லை பாதுகாப்புப் படை வீரர் (தூக்கத்திலும் கவனம்)
29. மீனவர் தொழில் (உறுதியற்ற தன்மை)
30. விமானி (உயிர் பனயம்)
31. விண்வெளிப் பயணம் (மறுபிறவி)
32. கூர்க்கா (தியாகம்)
33. விவசாயம் (பிறர் வாழ தானழிதல்)


இத்தகைய பன்முகப் பார்வை கொண்ட ஆண்கள் செய்யும் வேலைகளைப் பெண்கள் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள முன்வருவதில்லை. மாறாக அவர்கள் எதிர்பார்த்துப் படிக்கும் வேலை ...................................??????????????

1.   ஆசிரியர் தொழில்
2.   பொறியாளர்
3.   செவிலியர்

இம்மூன்றும் (White colour job) கட்டிடத்திற்கு உள்ளே செய்யும் வேலை; இதற்கு மேலே கூறிய வேலைகள் (சீருடைப் பணியாளர்கள்) யாவும் கட்டிடத்திற்கு வெளியே செய்யக்கூடியவை. இதிலிருந்து பெண்கள் எந்த வேலைக்கு சம உரிமை கோருகிறார்கள் என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.





பெண்களின் முன்னேற்றத்தில் சில வரிகள் ..............


பெண்கள் வேலைக்குச் செல்லக் கற்றுக் கொண்டனர் !
ஆண்கள் சமைக்கக் கற்றுக் கொண்டனர் !

பெண்கள் புகையிலிருந்து விடுதலையாயினர் !
ஆண்கள் புகைக்கு அடிமையாயினர் !

பெண்கள் வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டனர் !
ஆண்கள் நடக்கப் பழகிக் கொண்டனர் !

பெண்கள் தலை நிமிர்ந்து நடக்கக் கற்றுக்கொண்டனர் !
ஆண்கள் தலைகுனியக் பழகிக் கொண்டனர் !

ஆண்கள் கோவணத்திலிருந்து வேட்டிக்கு மாறினர் !
பெண்கள் சேலையிலிருந்து கோவணத்திற்கே சென்று விட்டனர் !

ஆண்கள் காதலித்தனர் தற்கொலையில் இறந்தனர் !
பெண்கள் காதலித்தனர் கௌரவக் கொலைகள் பிறந்தன !

பெண்கள் ஏற்றத்தில் இறைப்பதெல்லாம் தண்ணீராகத்தான் போகிறது !
ஆண்கள் கவலையில் சுழல்வதால் கண்ணீர்தான் வருகிறது !

மார்ச் எட்டில் பெண்கள் தினத்தில் வாழ்த்துங்கள் !!!
மே  லேட்டில் ஆண்களை தினம் தோறும் வாழ்த்துங்கள் !!!

Article By - Mr. Saravanan.






5 Comments:

  1. Dressing informations useful but amma stage il irupavargaluke dressing sense purivathu illai athu than sad news

    ReplyDelete
  2. Dressing informations useful but amma stage il irupavargaluke dressing sense purivathu illai athu than sad news

    ReplyDelete
  3. sir, where r u be ready to go to lawyer for anticipatory, ??????????? be ware of (women association)

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive