தமிழக சட்டப்பேரவையில் நேற்று மருத்துவ துறையில் உள்ள காலிப்பணியிடங்களை
நிரப்புவது தொடர்பான ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக உள்ளிட்ட
எதிர்கட்சிகள் கொண்டுவந்தன. இதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
நேரடியாக பதிலளித்து பேசியதாவது:
அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 5,422 டாக்டர்களும், கிராம செவிலியர்கள்,
லேப் டெக்னீஷியன், இசிஜி டெக்னீஷியன் என 6,918 பணியாளர்கள், மருத்துவ
தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். எம்டி,
எம்எஸ் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கு தேர்வு கிடையாது. வாக்-இன் செலெக்ஷன்
என்ற முறையில் விரும்புகிற இடத்தை பெற்றுக் கொள்ளும் கலந்தாய்வு
திட்டத்தின் மூலம் 32 சிறப்பு மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும், 7,461 செவிலியர்களை நியமிக்க அரசு முடிவெடுத்து அறிவிக்கை
வெளியிட்டுள்ளது. இவர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...