ஒவ்வொரு மாதமும், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் போதே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யப்படும்.பிரதி மாதம், 5ம் தேதிக்குள் அவரவர் வங்கிக் கணக்கில் ஊதியம் சேர்க்கப்படும்.
ஆனால், இம்மாதம், நிதியாண்டு கணக்கு மார்ச், 31ல் முடிந்த பின், அரசு விடுமுறை நாட்கள் வந்ததால், ஏப்ரல் 6ம் தேதி தான், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் கிடைத்தது.
இருந்தும், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மட்டும் இன்னும் சம்பளம் வழங்கவில்லை. இதனால், 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வித்துறையில் விசாரித்த போது, 'சம்பளக் கணக்கு மற்றும் பட்டுவாடா அலுவலகத்துக்கு, நிதித்துறையில் இருந்து, இன்னும் ஊதியம் வழங்கும் உத்தரவு வரவில்லை. அதனால், சம்பளம் போடுவது நிறுத்தப்பட்டுள்ளது. உயரதிகாரிகளிடம் பேசி வருகிறோம்' என்றனர்.

இதைப் போலவே 2009-2010 கல்வியாண்டில் RMSA மூலம் நடுநிலைப்பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 200 பள்ளிகளில் KH HEAD- இல் பணிபுரியும் 1200 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 200 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு கடந்த 8 மாதங்களாக PAY ORDER ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில் அனுப்பாததால் மனவேதனைக்கு உள்ளாகி வருகின்றனர்.மார்ச் மாதத்திற்கு இன்னும் pay order வரவில்லை.இனிமேல் வந்து BILL அனுப்பி எப்பொழுது ஊதியம் பெறுவோம் என்று தெரியவில்லை.
ReplyDelete