தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில்
ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு
தேர்வுத்துறை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கப்பட உள்ளது. இதற்காக
விண்ணப்பிக்க 24–ந்தேதி முதல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி
அறிவிக்கும் நோடல் மையத்தில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர் எஸ்.எஸ்.எல்.சி.படித்திருக்கவேண்டும். 18 வயதுக்கு குறைவு இல்லாமல் இருக்கவேண்டும். விண்ணப்பிக்க மே 6–ந்தேதி கடைசி நாள்.
எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே 31–ந்தேதி நடைபெற உள்ளது.
இதற்கான முழு அறிவிப்பு இன்று (புதன்கிழமை) வெளியாக உள்ளது.
எழுத்து தேர்வு வைத்து அரசு பணத்தை விரயம் செய்யாமல், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு நிரப்பலாமே!
ReplyDeleteஉங்களை அந்த பணியிடத்தில் நியமணம் செய்தால் அவர்கள் பணம் சம்பாதிப்பது எப்படி சாத்தியப்படும்
ReplyDeleteதகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு நிரப்பினால் அரசுக்கு டென்சன் குறையுமில்லை.
Deleteதேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்போராங்களாம் அப்படின்னா போஸ்ட்டிங் போட்ட மாதிரிதான்
ReplyDeleteபரவாயில்லையே புரிந்து கொண்டீர்களே இவர்களை பற்றி மீண்டு ம் வழக்கு வாய்தா என்று போகுமே தவிர பணி நியமனம் என்பது சந்தேகம் தான்
Delete