தமிழகத்திலிருந்து
அனுமதியைப் புதுப்பிக்கவும், புதிய கல்லூரி தொடங்க அனுமதி கோரியும்
விண்ணப்பிக்கப்பட்ட 31 விண்ணப்பங்களை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்
கவுன்சில் நிராகரித்துள்ளது.
பொறியியல்
கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், எம்.சி.ஏ., எம்.பி.ஏ. கல்வி
நிறுவனங்கள், ஃபார்மசி கல்வி நிறுவனங்கள் ஆண்டுக்கு ஆண்டு ஏஐசிடிஇ-யிடம்
விண்ணப்பித்து அனுமதியைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதுபோல் புதிய
கல்லூரிகள் தொடங்குவதற்கும், கல்லூரியை மூடவும், கல்லூரியை இடமாற்றம் செய்வதற்கும் ஏஐசிடிஇ-யிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
இதன்படி 2015-16 கல்வியாண்டுக்கு தமிழகத்திலிருந்து நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் ஏஐசிடிஇ-யிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
இதில்
15 பொறியியல் கல்லூரிகள், 7 பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 எம்.பி.ஏ.
கல்லூரிகள், 3 எம்.சி.ஏ. கல்லூõகள், 2 ஃபார்மசி கல்லூரிகள் என மொத்தம் 31
கல்லூரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதில்
சென்னை ஆவடியில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரி, தென்
தமிழகத்திலுள்ள அரசு பொறியியல் கல்லூரி ஆகியவையும் அடங்கும் என்பது
குறிப்பிடத்தக்கது.
இதுபோல், நாடு முழுவதும் 588 கல்லூரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பு
அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக கல்வி நிறுவனங்கள் வருகிற 15-ஆம் தேதி
தில்லியில் மேலமுறையீட்டுக்கான நிலைக் குழு முன்பு ஆஜராகி, தேவையான
தகவல்களை சமர்ப்பித்து விளக்கங்களை அளிக்க வேண்டும்.
அவ்வாறு
ஆஜராகாத கல்வி நிறுவனங்கள், மீண்டும் அடுத்த கல்வியாண்டில்தான் புதிதாக
விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும் என ஏஐசிடிஇ தென் மண்டல அதிகாரி ஒருவர்
கூறினார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...