மதிப்பெண் பதிவில் ஏற்படும் குளறுபடிகளை
தவிர்க்கும் வகையில், பிளஸ் 2 விடைத்தாள் டாப் சீட்டின் ’பி’ பகுதி, மாநில
அளவில் சரிபார்த்தலுக்கு சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நடப்பாண்டு
முதல், மொழிப்பாடங்களை தவிர, மற்ற பாட மதிப்பெண்கள், மாநில அளவில்
மறுபரிசோதனை செய்யும் வகையில், சென்னைக்கு அனுப்பப்படுகின்றன.கல்வித்துறை
அலுவலர் ஒருவர் கூறுகையில், ’விடைத்தாள் முகப்புசீட்டு ’பி’ பிரிவில்,
மதிப்பெண் பதிவு செய்யப்படும். விடைத்தாள் மற்றும் கம்ப்யூட்டரில் பதிவு
செய்யப்பட்ட மதிப்பெண்களை ஒப்பிட்டு சரிபார்க்க, அப்பகுதியிலுள்ள
’பார்கோடு’ பயன்படுத்தப்படுகிறது. மாநில அளவில் சரிபார்க்கவே சென்னைக்கு
அனுப்பி வைக்கும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது’என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...