Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி மாணவர்களுக்கு ஏப்.25-இல் மாதிரி வடிவமைப்பு பயிலரங்கம்

           தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான மாதிரி வடிவமைப்பு குறித்த பயிலரங்கம் வரும் 25,26-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

           சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல், தொழில்நுட்ப மையத்தில் நடைபெற உள்ள இந்த மாதிரி வடிவமைப்பு பயிலரங்கில் 8-ஆம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்த பயிலரங்கம் நடைபெறும்.

               இதில் வரும் 25-ஆம் தேதி முதலாவது பிரிவு மாணவர்களுக்கும், 26-ஆம் தேதி இரண்டாவது பிரிவு மாணவர்களுக்கும் பயிலரங்கம் நடைபெறும்.

                   இதில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது பெயர்களை வரும் 23-ஆம் தேதிக்குள் 044-24410025 என்ற தொலைபேசி எண்ணிலோ, நேரில் வந்தோ பதிவு செய்து கொள்ள வேண்டும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive