'பிளஸ் 2 பொதுத் தேர்வின் கடைசி தேர்வான
உயிரியலில் கடினமாக வினாக்கள் இடம் பெற்றதால் 'சென்டம்' எடுக்கும்
மாணவர்கள் எண்ணிக்கை குறையும்' என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.
இத்தேர்வில்
மூன்று மதிப்பெண் பகுதியில் இடம் பெற்ற இரண்டு வினாக்களில் 'புளுபிரின்ட்'
படி விளக்கம் எழுதும் வகையில் ஒன்றும், படம் வரைந்து எழுதும் வகையில் ஒரு
வினாவும் இடம் பெறவேண்டும். ஆனால் இரண்டும் விளக்கம் எழுதும் வகையில் இடம்
பெற்றன. உயிரி தாவரவியல் பகுதியில் 24வது வினாவில் 'போர்டாக்ஸ்' என்ற
வார்த்தைக்கு பதில் 'போர்டவுன்' என தவறாக இடம் பெற்றதால் மாணவர்கள்
குழம்பினர். உயிரி விலங்கியல் பிரிவில், ஒரு மதிப்பெண் பகுதியில் மொத்தம்
16 வினாக்களில் ஆறு மட்டும் 'புக்பேக்'கில் இருந்து இடம் பெற்றன. பிற
கேள்விகள் பாடத்திற்கு உள் இருந்து கேட்கப்பட்டன. மூன்று மதிப்பெண்
பகுதியிலும் 12 வினாக்களில் இரண்டு மட்டுமே 'புக்பேக்'கில் இருந்து
கேட்கப்பட்டன. பிற வினாக்கள் பாடத்திற்கு உள் இருந்தும், சிந்தித்து
விடைளிப்பதாகவும் அமைந்தன. ஐந்து மதிப்பெண் பகுதியில் கட்டாய வினா பத்து
ஆண்டுகளில் இதுவரை கேட்கப்படாத பகுதியில் இருந்து இடம் பெற்றதும் மாணவர்கள்
எதிர்பார்க்கவில்லை.
இத்தேர்வு குறித்து மதுரை ஒத்தக்கடை அரசு பெண்கள் பள்ளி விலங்கியல் பாட ஆசிரியர் சரவணமுருகன் கூறுகையில், " உயிரி விலங்கியல் பகுதியில் பாடங்களுக்குள் இருந்து தேடித்தேடி பிடித்து வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட அனைத்தையும் எழுதுவது சிரமம். கிராமப்புற மாணவர்கள் பெரும்பாலும் திணறினர். இத்தேர்வில் 'சென்டம்' எண்ணிக்கை குறையவும், கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான 'கட்ஆப்' குறையவும் வாய்ப்புள்ளது" என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...