Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாவட்ட வாரியாக நடக்கிறது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் நாளை உண்ணாவிரதம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இதில், 27 ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்கின்றன. 



மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, கடந்த மாதம் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைத்தார். ஆனால், தலைமைச் செயலகம் வந்த ஆசிரியர்் சங்க பிரதிநிதிகளை நீண்ட நேரம் காக்க வைத்த முதல்வர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் திருப்பி அனுப்பிவிட்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் ஜேக்டோ அமைப்பை மீண்டும் உருவாக்கி தொடர் போராட்டங்கள் நடத்த அறிவிப்பு விடுத்தனர். அதைத் தொடர்ந்து, மாவட்டங்களில் பேரணிகளை ஆசிரியர்கள் நடத்தினர். அதற்கு பிறகும் அரசு ஆசிரியர்கள் பிரச்னை மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, இப்போது மீண்டும் 27 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து அனைத்து மாவட்ட தலைநரங்களிலும் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். 

திட்டமிட்டபடி, நாளை இந்த உண்ணாவிரதம் நடக்கிறது. இதில், 27 ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். அனைத்து ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைமை தாங்க உள்ளனர். இதற்கு பிறகும் ஆசிரியர்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என அனைத்து தரப்பு ஆசிரியர்களும் நாளை உண்ணாவிரதம் இருக்கின்றனர். இதையடுத்து, மாவட்டங்களில் பதற்றம் ஏற்படுவதை தடுக்கவும், தேைவப்பட்டால் ஆசிரியர்களை கைது செய்யவும் போலீசார் தயார் நிலையில் இருக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.




17 Comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. thevai illatha poraattam...

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இதற்கு பிறகாவது இந்த அரசாங்கம் அசைந்து கொடுக்குமா

    ReplyDelete
  5. 15 கோரிக்கைகள் என்பது போராட்டத்தின் வீரியத்தை குறைத்து விடும். TET தேர்வை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை, TET தேர்ச்சி பெற்று பணியாற்றி கொண்டு இருக்கும் ஆசிரியர்களான நாங்கள் ஏற்று கொள்ள மாட்டோம்...
    TET கோரிக்கை தவிர மற்ற கோரிக்கைகள் நிறைவேற வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. TETதேர்வை நீக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை தான் ...ஏனென்றால் எல்லா ஆசிரியர்களும் ஏற்கனவே முறையான பயிற்சி பெற்றவர்கள் அவர்களுக்கு ஆசிரியர் ஆகும் தகுதி உள்ளது மீண்டும் ஒரு தேர்வு என்பது முறைகேட்டிற்கும் ஊழலுக்கும் வழி வகை செய்யும் மேலும் நடந்த இரண்டு தகுதிதேர்வும் முறையாக நடைபெறவில்லை என்பதற்கு நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளே சாட்சி ..இந்த தேர்வின் மூலம் நடைபெற்ற பணி நியமனங்கள் செல்லாது என தீர்ப்பு வந்தால் உங்கள் நிலைமை என்ன அவது (TIRUPURA MANILA VAZHAKKU )

      Delete
    2. தவறு.! TET தேர்வை நீக்க கோரும் தாங்கள், வசதியாக TRB தேர்வை மறந்து விடுகிறீர்கள்....!
      தாங்கள் எழுதியது:
      (ஏனென்றால் எல்லா ஆசிரியர்களும் ஏற்கனவே முறையான பயிற்சி பெற்றவர்கள் அவர்களுக்கு ஆசிரியர் ஆகும் தகுதி உள்ளது மீண்டும் ஒரு தேர்வு என்பது முறைகேட்டிற்கும் ஊழலுக்கும் வழி வகை செய்யும் )

      Delete
    3. மேலும் தாங்கள் TET தேர்வை சந்தித்து உள்ளிர்களா...!
      அதற்காக இரவு பகல் பாராமல் உழைத்தது உண்டா...!?

      கூட்டமைப்பில் உள்ள யாரும் எங்களுக்கு வேலை வாங்கி தரவில்லை. எங்கள் உழைப்பில் வந்த வேலை இது . எனவே, இந்த 15 அம்ச கோரிக்கை போராட்டதிற்கு எப்படி நாங்கள் ஆதரவு தர முடியும்.....!?

      Delete
    4. ஆசிரியர் கூட்டமைப்பு என்பது வேலை வாங்கி தருவதற்கான அமைப்பு அல்ல அது ஆசிரியர்களின் உரிமைக்காக போராடும் அமைப்பு நாளைக்கே உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் ஓடி வந்து உதவி செய்யும்

      Delete
    5. அப்போது,பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு TET தேர்வு தான் "தலையாய " பிரச்சனையா....!!??

      Delete
    6. மேலும் நாங்கள் கடினமாக உழைத்து வேலையில் சேர்ந்த பின், அதுவரை நாங்கள் அறியாத ஒரு கூட்டமைப்பு நாங்கள் வந்த வழியை அடைக்க எங்களிடம் ஆதரவு கேட்பது நகைச்சுவையாக உள்ளது

      Delete
    7. அடுத்த ஆட்சி வந்தால் நீங்கள் வந்த வழி அடைபட்டு போகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

      Delete
    8. mr. sundaram தகுதி தேர்வை ரத்து செய்துட சொல்லுரிங்களே ! தகுதி தேர்வில தேர்ச்சி அடைந்தவர்களை பற்றி உங்களுக்கு எதாவது அக்கறை இருக்கா . உங்களுக்கு தெரியுமா நம்ம தமிழ் நாட்டு அரசு பள்ளிகளின் எழுத்தறிவு என்ன இலட்சனத்தில் இருக்குனு. தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களால் தான் நல்ல வளர்ச்சியை கொண்டு வர முடியும்.உங்களுக்கு ஊதியம்தான் முக்கியமா? 10000 மாத சம்பளம் வாங்கிட்டு வேலை செய்ய திறமையான ஆசிரியர்கள் நிறைய பேர் தமிழ் நாட்டுல இருக்காங்க. பல சுய நல சக்திகளைதாண்டி தகுதி தேர்வை நடத்திய அரசுக்கு என் வாழ்த்துக்கள்.

      Delete
    9. சகோதரரே, உங்களுக்கு ஒன்று தெரியுமா....!!
      RTE சட்டப்படி தகுதி தேர்வு வைத்தால் மட்டுமே 60% பணம் நடுவண் அரசாங்கம் தரும்.. எனவே எந்த அரசாக இருந்தாலும் தகுதி தேர்வை நீக்க முடியாது ....
      மேலும் நாங்கள் வயதை மட்டுமே முன்னுரிமை ஆக கொண்டு வேலைக்கு சேர்ந்த கூட்டம் கிடையாது...
      TNPSC GROUP1,2,4: CTET, IBPS என பல தேர்வுகளில் வெற்றி பெற்று எங்களை நிருபித்த ஆற்றல் உள்ளவர்கள்...

      Delete
    10. TET தேர்வில் தேர்ச்சி பெற்ற நாம், JACTO கூட்டமைப்பு நடத்தும் எந்த ஒரு போராட்டத்திற்கும் ஆதரவு தர கூடாது......!!!
      மேலும், TET வெற்றி பெற்ற மற்ற ஆசிரியர்களையும் சேர்த்து '"TET நீக்க வேண்டும்" என்ற கோரிக்கையை நீக்க நம்மால் ஆனா எல்லா முயற்சிகளையும் செய்வோம்...
      அடுத்து, JACTO கூட்டமைப்பு நடத்தும் எந்த ஒரு போராட்டத்திற்கும் கலந்து கொள்ளாது நமது எதிர்ப்பை தெரிவிப்போம்...!!

      Delete
  6. All the best teachers...but tet thervai yen neekka vendum?

    ReplyDelete
  7. Everything ok also ask the government to pass a act which is every government employee children must be joined government school if not at all do this don't give them promotion

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive