பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின அல்லது மலை சாதி வகுப்பைச்சேர்ந்த பட்டப்படிப்புடன் பி.எட். முடித்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஆசிரியர் தகுதிதேர்வு எழுதுவதற்கு 40நாட்களுக்கு இலவச பயிற்சியை அளிக்க முடிவு செய்தார்.
இதைத்தொடர்ந்து இந்த இலவச பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் அதன் இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் நடத்த உள்ளார்.பயிற்சி தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் (டயட்) நடத்தப்பட இருக்கிறது. இதில் சேர விரும்பும் பழங்குடியின அல்லது மலை சாதி வகுப்பை சேர்ந்த பி.எட். முடித்தவர்கள் சேரலாம். அவ்வாறு சேருவதற்கு விரும்புபவர்கள் தங்கள் பெயர்களை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பதிவு செய்ய 30–ந்தேதி கடைசி.பயிற்சி கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 15 மாவட்டங்களில் அளிக்கப்பட உள்ளது.
இந்த மாவட்டங்களில் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பயிற்சி பெறலாம்.
Dear Friend ,When will Call for TET?
ReplyDelete