தனியார்
துறையில் வேலை பெறுவதற்கான வேலைவாய்ப்பு முகாம் ஏப்ரல் 11-ஆம் தேதி
நடைபெறும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி தெரிவித்தார்.
இதில்
தனியார் நிறுவனங்களில் உள்ள காலியிடங்களுக்கு பணியாளர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் கணினி இயக்குநர், இளநிலை செயல் அதிகாரி,
வரவேற்பாளர், வாய்ஸ், நான் வாய்ஸ் புராஸஸர்ஸ், தொழில்நுட்ப உதவியாளர்
உள்ளிட்ட பல்வேறு பணிக்கான நேர்காணல் நடைபெறும்.
இதில்
8, 10, 12-ஆம் வகுப்பு படித்தவர்களும், இளநிலை, முதுநிலை பட்டம்
பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் ஐடிஐ, பட்டயப் படிப்பு
படித்தவர்களும் கலந்து கொள்ளலாம்.
இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களின் சுயவிவர குறிப்புடன் (பயோ டேட்டா) நேரில் வரவேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...