பத்தாம்
வகுப்புக்கு நாளையும், மற்ற வகுப்புகளுக்கு, 22ம் தேதியும் தேர்வுகள்
முடிகின்றன. தொடக்கப் பள்ளிகள் தவிர மற்ற வகுப்புகளுக்கு, 23ம் தேதி முதல்
கோடை விடுமுறை துவங்குகிறது.
ஜூன், 1ம் தேதி புதிய வகுப்புகள் துவங்கும்.பத்தாம் வகுப்புக்கு, கடந்த, 19ம் தேதி பொதுத் தேர்வு துவங்கியது. தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் தேர்வுகள் முடிந்துள்ளன. நாளை, சமூக அறிவியல் தேர்வுடன் பொது தேர்வு முடிகிறது.ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு உள்ளிட்ட மற்ற வகுப்புகளுக்கு, தேர்வுகள் நடந்து வருகின்றன. வரும், 22ம் தேதி அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிகின்றன. வரும், 23ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஆனால், ஒன்று முதல் ஐந்து வரையிலான தொடக்கப்பள்ளிகள் ஏப்ரல், 30ம் தேதி வரை இருக்கும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூன், 1ம் தேதி பள்ளிகளை திறக்க, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...