பிளஸ்1 தேர்வு முடிவுகள் வெளிவரும் முன்பே பிளஸ்2 மாணவர்களுக்கு அரசு
மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கோடை கால சிறப்பு வகுப்புகள்
நடத்தப்படுகிறது. இதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் பிளஸ்2 மற்றும் 10ம்
வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது, இந்த திட்டத்தை அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் சிலவும்
பின்பற்ற தொடங்கிவிட்டன. இதற்கான உத்தரவை அந்தந்த பள்ளிகளின்
ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் வாய்மொழியாக
பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் மாதம் முழுவதும்
ெதாடர்ச்சியாகவும் மே மாதத்தில் ஒரு நாளைக்கு ஒரு பாடம் என்ற அளவிலும்
நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட பாடத்தின் ஆசிரியர் 3
நாள் இடைவெளியிலும், மாணவர்கள் அனைத்து நாட்களும் வரவேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது
குறித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக
நெல்லை மாவட்ட தலைவர் சண்முகையாபாண்டியன், செயலாளர் பாபுசெல்வன் வெளியிட்ட
அறிக்கை: ஒரு சில அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள்,
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தவேண்டும் என முதுகலை
ஆசிரியர்களை கட்டாயப்படுத்துகின்றனர். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்
வெயிலின் தாக்கம் உச்சத்தை அடைகிறது.
மேலும் ஓராண்டு தொடர்ந்து கல்வி கற்ற மாணவ, மாணவிகளுக்கு மன அழுத்தத்தை போக்குவதற்கும் விடுமுறை தேவைப்படுகிறது.
பிளஸ்1 வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் மாவட்ட அளவில் வெளியிடப்படாத
நிலையில் பிளஸ்2 வகுப்புகளுக்கு உரிய பாடத்தை அனைத்து மாணவர்களுக்கும்
நடத்த ஆசிரியர்களை நிர்பந்திப்பது கண்டிக்கத்தக்கது. பலர் ஆண்டு இறுதித்
தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்து தேர்வு முடிவுகளை தயார் செய்யும்
பணியிலும் ஈடுபட்டுள்ளனர். எனவே கோடை கால வகுப்புகளை நடத்துவது
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும். மனரீதியாக
மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தலைமை ஆசிரியர்கள்தான் பொறுப்பு
ஏற்க வேண்டும். எனவே சிறப்பு வகுப்பு நடத்தும் திட்டத்தை ரத்து
செய்யவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
திருந்தாத கல்வித்துறை!மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தலைமை ஆசிரியர்கள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதை கல்வி அதிகாரிகள் தான் பொறுபேற்க்க வேண்டும், என்று உத்தரவிடுங்கள்
ReplyDelete