டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான
183 காலிப்பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வில் 659 தேர்வர்கள் பங்கேற்றனர்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 605 பேரின் பதிவெண்கள் கொண்ட
பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 30ம் தேதி பிராட்வேயில் உள்ள
டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள், நேரம் குறித்த தகவல்கள் தனியே
அனுப்பப்படும். குறிப்பிட்ட நாளில் உரிய அசல் சான்றிதழ்களுடன் சான்றிதழ்
சரிபார்ப்பில் கலந்து கொள்ள தவறுபவர்கள், அடுத்தக்கட்ட தேர்வு நிலைகளுக்கான
தகுதியினை இழந்தவராகிறார்.
When will DEOexam result
ReplyDelete